tamilnadu

img

அம்மா உணவகத்தின் பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை

கோவை, மே 5- கோவையில் அம்மா உணவகத்தின் பணியாளர்களுக்காக கொரோனா வைரஸ் பி.சி.ஆர் பரிசோதனை முகாம் செவ்வாயன்று நடைபெற்றது.

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம் ராமர் கோயில் கல்யாண மண்டபத்தில், கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளின் தொடர்ச்சியாக, அம்மா உணவகத்தின் பணியாளர்களுக்காக கொரோனா வைரஸ் பி.சி.ஆர் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இம்முகாமில் அம்மா உணவகத்தின் பணியாளர்கள் மற்றும் தூய்மைப்பணியாளர்கள், ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகிற கர்ப்பிணிப் பெண்கள் உள்ளிட்ட 250-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இம்முகாமினை, மத்திய மண்டல உதவி ஆணையர் மகேஷ் கனகராஜ், நகர் நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், உதவி நகர் நல அலுவலர் வசந்தகுமார், மண்டல சுகாதார அலுவலர் இராதாகிருஷ்ணன், அலுவலர்கள் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.