tamilnadu

img

காமன் கூத்து திருவிழா

காமன் கூத்து திருவிழா

டலுார் அருகே தாயகம் திரும்பிய அரசு தேயிலை தோட்ட தொழிலாளர்கள்  வசிக்கும் ஆமைக்குளம் கிராமத் தில் விடியவிடிய நடைபெற்ற காமன் கூத்து திருவிழாவை, திர ளான மக்கள் கண்டு களித்தனர். நீலகிரி மாவட்டம், கூடலூரில் இலங்கையிலிருந்து தாய கம் திரும்பிய தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் அதிக அள வில் வசிக்கும் கூடலூரில் ஆண்டுதோறும் மாசி மாதம் ‘காமன்  கூத்து’ விழா பாரம்பரிய முறைப்படி நடத்தி வருகின்றனர். இந் தாண்டுக்கான விழா கடந்த 11 ஆம் தேதி துவங்கியது. நாள் தோறும் ரதி- மன்மதன் வேடமிட்ட இளைஞர்கள் வீடு, வீடாக  சென்று நடனமாடி வந்தனர். நிறைவு விழா சனியன்று இரவு கலை நிகழ்ச்சிகளுடன் துவங்கி ரதி-மன்மதன் நடனம் நடைப்பெற்றது. பின் ரதி, மன் மதனை ஊர்வலமாக தேவர்சபைக்கு அழைத்து வரும் நிகழ்ச்சி, அவர்களின் திருமணம், மொய் விருந்து உபச் சார நிகழ்ச்சிகள் நடைபெற்றது.  இரவு முழுவதும் விடிய, விடிய நடைபெற்ற இவ் விழாவில் இப்பகுதியைச் சேர்ந்த சுற்றுவட்டார கிராமங் களிலிருந்து ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு கண்டு ரசித்தனர்.

சாலை அமைக்க எதிர்ப்பதா? சேலம்,

மார்ச் 17 – சேலம் மாவட்டம் காடையாம்பட்டி வட்டம் தும்பிப்பாடி கிராமம் தொன்னப்பள்ளி பகுதியில் 50 ஆண்டுகளாக குடியி ருந்து வரும் மக்களுக்கு தார் சாலை அமைக்க ஏற்கனவே நிதி ஒதுக்கியும் அதை ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு நபர் கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் தார் சாலை அமைக்கும் பணி  தடைபட்டுள்ளது. எனவே, இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு நிலத்தை கையகப்படுத்தி தார் சாலை அமைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என ஊர் பொதுமக்கள் மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.