கட்டிடப் பொறியாளர்கள் மண் சாப்பிடும் நூதனப் போராட்டம்
நீலகிரி மாவட்டத்தில் கட்டிட அனு மதி வழங்காமல் காலம் தாழ்த்தி வரு வதை கண்டித்து நீலகிரி கட்டிடப் பொறி யாளர்கள் சங்கத்தினர் மண் சாப்பிடும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டத்தில் கட்டிடம் கட்ட மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவிடம் விண் ணப்பித்து அந்த குழு ஒப்புதல் அளித்த பின்னரே கட்டுமானப் பணிகள் மேற் கொள்ள முடியும். இந்த நடைமுறை கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக அமலில் உள்ளது. இதனால், மாவட்டம் முழுவதும் குடியிருப்புகள் கட்ட அனு மதி பெற முடியாமல் பொதுமக்கள் பல ரும் நெருக்கடிக்கு உள்ளாகிறார்கள். கடந்த 3 ஆண்டுகளாக குடியிருப்பு கட்ட விண்ணப்பித்தவர்களில் 4 ஆயிரத்திற் கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் ஒப்பு தல் கிடைக்காமல் கிடப்பில் போடப் பட்டு உள்ளது. மாவட்டம் முழுவதும் கட் டிடப் பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், மாவட்ட நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையை கண்டித்து நீல கிரி கட்டிடப் பொறியாளர் சங்கம் சார்பில் புதனன்று ஏ.டி.சி. சுதந்திர திடலில் மண் சாப்பிடும் நூதனப் போராட்டத்தில் ஈடு பட்டனர். இதுகுறித்து நீலகிரி கட்டிடப் பொறி யாளர்கள் சங்கத் தலைவர் திலக் செய் தியாளர்களிடம் கூறுகையில், கட்டிட அனுமதி எவ்வித காரணமும் இல்லா மல் கடந்த 5 ஆண்டுகளாக வழங்கப் படாமல் உள்ளது. மாவட்ட நிர்வாகத் தின் நிலைப்பாட்டை புரிந்துகொள்ள இயலாத நிலையில், இனி நீலகிரி மாவட்டத்தில் வாழ்வதா, சாவதா என்ற நிலைக்க தள்ளப்பட்டுள்ளோம். கட்டிட அனுமதி குழுவின் தலைவராக உள்ள மாவட்ட ஆட்சியர் கால தாமத்துக்கான காரணத்தை வெளிப்படையாக கூற வேண்டும் என்றார். இதில், செயலா ளர் மாதேஷ், பொருளாளர் ஹரிஹரன், துணைத் தலைவர் பத்மநாபன் நிர்வாகி விஜயகாந்த் முத்துகிருஷ்ணன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.