சட்டப்படி ஊதியம் - அதிகாரிகள் உறுதி போராட்டத்தை நிறைவு செய்தது சிஐடியு
திருப்பூர், ஜூலை 3 - சட்டப்படி ஊதியத்தை பெற் றுத்தர அதிகாரிகள் உறுதியளித்த நிலையில், ஊரக வளர்ச்சி உள் ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தின் தலைமையில் தொழிலாளர்கள் நடத்திய போராட்டம் மூன்றாவது நாளில் முடிவுக்கு வந்துள்ளது. சிஐடியு ஊரக வளர்ச்சி உள் ளாட்சித் துறை ஊழியர் சங்கம் தொடுத்த வழக்கில், மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளில் வேலை செய்யும் அவுட்சோர்சிங் ஒப்பந்த தூய்மைப் பணியாளர் உள் ளிட்ட ஊழியர்களுக்கும், ஊராட்சி களில் வேலை செய்யும் தூய்மைக் காவலர்கள், டேங்க் ஆபரேட்டர் களுக்கும் அரசாணை (2டி) 62 ன்படி ஊதியம் வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டது. இந்த உத்தரவை அமல் படுத்தக் கோரி கடந்த ஜூன் 30ஆம் தேதி முதல் திருப்பூர் மாவட்ட ஆட் சியர் அலுவலகம் முன்பாக ஆயி ரத்திற்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள், குடிநீர் பணியா ளர்கள், ஓட்டுநர்கள், டிபிசி ஊழியர் கள் என ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் இந்த காத்திருப்புப் போராட் டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட் டம் கடந்த மூன்று நாட்களாகப் பேரெழுச்சியுடன் நடைபெற்று வந் தது. இரண்டாம் நாள் திங்களன்று மாவட்ட ஆட்சியர் மனிஷ்ராவ் நார ணவரே சிஐடியு சங்கத்தினரை அழைத்துப் பேசினார். இதில் உள் ளாட்சி ஊழியர்களின் கோரிக்கை கள் குறித்து மாநில அரசின் கவ னத்திற்கு கொண்டு செல்வதாக ஆட்சியர் உறுதியளித்தார். எனி னும் கோரிக்கை குறித்து திட்டவட்ட மான முன்னேற்றம் இல்லாமல் உத் தரவாதம் கிடைக்காமல் போராட் டத்தை முடித்துக் கொள்ளவ தில்லை என சிஐடியு நிர்வாகிகள் உறுதியாக நின்றனர். எனவே மூன்றாவது நாளாக புதனன்றும் போராட்டம் தொடர்ந்தது. அதிகாரிகள் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி, நீதிமன்றம் அறி வித்த, சட்டப்படியான ஊதியத்தை பெற்றுத்தர நகராட்சி நிர்வாக இயக்கு நரகத்தின் மூலம் விரைவில் நடவ டிக்கை எடுக்கப்படும். இம்மாதம் அவுட்சோர்சிங் ஒப்பந்த நிறுவனங் கள் மூலம் ஊதிய உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பேரூ ராட்சிகளில் வேலை செய்யும் சுய உதவிக்குழு தூய்மைப் பணியாளர் களுக்கு நீதிமன்ற உத்தரவுப்படி ஊதியத்தை ஒரு மாதத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஊராட்சிகளில் வேலை செய்யும் டேங்க் ஆபரேட்டர், தூய்மைக் காவ லர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்ட அரசாணைப்படி ஊதியம் வழங்க ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை இயக்குநரகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். இ.பி.எப் மற்றும் இ.எஸ்.ஐ. பிடித்தங்களில் நிறுவ னங்களின் பங்கு தொகைகள் முறை யாக செலுத்தப்பட்டுள்ளதா என் பதை ஒரு மாத காலத்தில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். அவுட்சோர்சிங் ஒப்பந்த தூய்மைப் பணியாளர் உள்ளிட்ட ஊழியர்க ளுக்கு சட்டப்படியான போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்ப டும். ஒப்பந்த ஊழியர்கள் அனை வருக்கும், மாதந்தோறும் சம்பள ரசீது வழங்க நடவடிக்கை எடுக்கப்ப டும். போராட்டத்தில் கலந்து கொண்ட ஊழியர்கள் மீது பழிவாங் கும் நடவடிக்கைகள் இருக்காது என்று அதிகாரிகள் ஒப்புக் கொண்ட னர். இதன் அடிப்படையில் மூன் றாம் நாள் நிறைவில் காத்திருப்புப் போராட்டம் தற்காலிகமாக முடித் துக் கொள்ளப்பட்டதாக சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சி ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் கே. ரங்கராஜ் தெரிவித்தார். மேலும் அரசு அதிகாரிகள் சொன்ன உத்தர வாதத்தின்படி மேற்கொள்ளும் நட வடிக்கைகளைப் பொறுத்து, 15 தினங்களில் சங்கத்தில் விவாதித்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது என்று முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரி வித்தார். திருப்பூர் மாவட்டத்தின் பலதரப்பினரையும் திரும்பிப் பார்க்கச் செய்த உள்ளாட்சி ஊழி யர்களின் மூன்று நாட்கள் போராட் டத்திற்கு ஆதரவளித்த அனைத்து தோழமை அமைப்புகளுக்கும், நிர் வாகிகளுக்கும் சங்கத்தின் சார் பாக நன்றி தெரிவித்துக் கொள்வ தாகவும் கே.ரங்கராஜ் கூறினார்.