tamilnadu

img

கோவையில் மூத்த குடிமக்களுக்கு தலைக்கவசம் வழங்கும் விழா!

கோவை,அக்.02- மூத்த குடிமக்களுக்குத் தலைக்கவசம் வழங்கும் விழா இன்று கோவையில் நடைபெற்றது.
மூத்த குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், கோவை மாநகர காவல் துறை சார்பில், மூத்த குடிமக்களுக்கு 100 இலவச தலைக்கவசம் வழங்கும் விழா, கோவை மாநகர ஆயுதப்படை வளாகம், சிறுவர் போக்குவரத்து பூங்காவில் இன்று காலை 11 மணியளவில் நடைபெற்றது.
கோவை மாநகர காவல் ஆணையரது அறிவுரைகளின் படி, ஊர் காவல்படையும், போக்குவரத்து கிழக்கு காவல் துறையும் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தினர். 
கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் இந்நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து, மூத்த குடிமக்களுக்கு இலவச தலைக்கவசங்களை வழங்கினார். 
இருசக்கர வாகனங்களை ஓட்டும் போது ஏற்படக்கூடிய விபத்துக்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளத் தலைக்கவசம் அணிவது மிகவும் அவசியம் என்பதைக் காவல் துறையினர் அழுத்தமாக வலியுறுத்தினர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மூத்த குடிமக்கள், காவல்துறையினரின் இந்த முயற்சியை வெகுவாக பாராட்டினர்.