கோவையில் ரூ.31000 மதிப்பிலான பழைய ரூ500 ,1000 நோட்டுகளை மாற்ற முடியாமல் 92 வயது மூதாட்டி திணறி வருகிறார்.
கோவையை அடுத்த கொண்டையம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கமலம்மாள் (92). இவரது கணவர் ராஜ்வாலா இறந்து பல ஆண்டுகளாகிவிட்ட நிலையில் இவர்களின் இரண்டு மகள்கள் மற்றும் மகனின் பராமரிப்பில் வாழ்ந்து வருகின்றார்.
கமலாம்பாள் கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை சேமித்து வைத்துள்ளார். ரூ.33,000 சேமித்து வைத்திருக்கிறார். அதில் 51 பழைய 500 ரூபாய் நோட்டுக்களும், 6 ஆயிரம் ரூபாய் நோட்டுகளும் உள்ளது. வயதாகி விட்டதால் கேட்கும் திறனையும் மூதாட்டி கமலாம்பாள் இழந்த நிலையில், வீட்டில் பணத்தை சேர்த்து வைத்தையே மறந்து விட்டார். பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது மகன், மகள் ஆகியோர் கேட்ட போதும் தன்னிடம் பணம் இல்லை என்று சொன்னதால் அவரது குடும்பத்தினரும் கண்டு கொள்ள வில்லை. இந்நிலையில் சமீபத்தில் மூதாட்டி கமலாம்பாளின் பீரோவை சுத்தப்படுத்தியபோது, அதில் ஒரு புடவைக்குக் கீழே பணம் இருப்பது தெரியவந்துள்ளது. தற்போது அந்த பணத்தை மாற்ற வழியில்லாமல் கமலாம்பாள் குடும்பத்தினர் தவித்து வருகின்றனர்.
ரூ.31000 மதிப்பிலான பழைய ரூ. 500,1000 நோட்டுகளை மாற்ற முடியாமல் திணரும் 92 வயது மூதாட்டி