tamilnadu

img

உலகில் கொரோனா பாதிப்பு 1 கோடியை நெருங்குகிறது...  

தில்லி 
உலகை தனது உள்ளங்கையில் வைத்து மிரட்டி வரும் கொரோனா என்னும் ஆட்கொல்லி வைரஸ் தற்போது ஆசியா, வடஅமெரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களை மையம் கொண்டு அங்குள்ள நாடுகளை துவம்சம் செய்து வருகிறது.

ஆசிய கண்டத்தில் இந்தியா கொரோனா மையமாகவும், வட அமெரிக்க கண்டத்தில் அமெரிக்கா கொரோனா மையமாகவும், தென் அமெரிக்க கண்டத்தில் பிரேசில் கொரோனா மையமாகவும் உள்ளது. கொரோனா எழுச்சி பெற்ற காலத்தில் அதிக பாதிப்பை சந்தித்த ஐரோப்பிய  நாடுகள் தற்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக கொரோனா பரவலை கட்டுப்படுத்தி வரும் நிலையில், ரஷ்யா மட்டும் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. ரஷ்யா ஐரோப்பாவின் கொரோனா மையமாக உள்ளது. 

இந்நிலையில் உலகில் கொரோனா பாதிப்பு 1 கோடியை நெருங்குகிறது. இதுவரை 99 லட்சத்து 30 ஆயிரத்து 635 ஆக உள்ளது. அதிகபட்சமாக அமெரிக்காவில் 25 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கையும் 5 லட்சத்தை நெருங்கி வருகிறது. இதுவரை உலகில் 4 லட்சத்து 97 ஆயிரம் பலியாகியுள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கையிலும் அமெரிக்கா (1.27 லட்சம்) தான் முதலிடத்தில் உள்ளது. ஆறுதல் செய்தியாக 53 லட்சத்து 73 ஆயிரம் பேர் கொரோனாவை வென்று இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர்.