கோவை, ஜூலை 1- கோவை அருகே கொரோனா அச்சம் காரணமாக இளைஞர் ஒருவர் சரக்கு ரயில் முன்பு பாய்ந்து தற் கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், இருகூர் காமாட்சிபுரம் பகு தியைச் சேர்ந்தவர் கண்ணன்(21). இவர் அரசூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவருக்கு கடந்த இரண்டு நாட்களாக காய்ச்சல் இருந்து வந்துள்ளது. தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு விட்டதோ என பயத் தில் வீட்டில் உள்ள அனைவரிடமும் சொல்லி புலம்பி யுள்ளார். மேலும் தன் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலை யில் புதனன்று காலை 10 மணியளவில் வீட்டை விட்டு வெளியே வந்த கண்ணன் மதியம் வரை வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த அவரது உறவி னர்கள் கண்ணனைத் தேடி உள்ளனர். அப்போது இருகூர் ரயில் நிலையம் பகுதியில் சரக்கு ரயில் மோதி வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத் தது, அதன் பேரில் அங்கு சென்று பார்த்தபோது ரயில் மோதி இருந்தது கண்ணன் என தெரியவந்தது. மேலும், கோவை நோக்கி வந்த சரக்கு ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதும் போலீ சார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.