பொள்ளாச்சி, மே 12- பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் உலக செவிலியர் தினம் கடைபிடிக்கப்பட்டது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி அரசு தலைமை மருத் துவமனையில் உலக செவிலியர் தினம் செவ்வாயன்று மருத்துவமனை கண்காணிப்பாளர் கலைச்செல்வி தலை மையில் கொண்டாடப்பட்டது. இதில், சமூக இடைவெளி யினை கடைபிடித்து மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். மேலும் மன அழுத்தத் திற்கான யோகா பயிற்சிகளும், மூச்சுப்பயிற்சிகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதில் மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் என திரளானோர் கலந்துக் கொண்டனர்.