சேலம், ஏப். 24-சேலம் சோனா கல்லூரியில் உலக புத்தக தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.உலக புத்தக தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்.23 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. ஐநா சபையின் கல்வி அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு சார்பில் வாசிப்பு, வெளியீடு, பதிப்புரிமை ஆகியவற்றை ஊக்குவிக்கும் ஓர் நிகழ்வாக இவ்விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இவ்விழாவை சிறப்பிக்கும் வகையில் சேலம்சோனா கல்லூரியின் துணைத் தலைவர் தியாகு வள்ளியப்பா தலைமையில் கல்லூரியின் முதல்வர் எஸ்.ஆர்.ஆர்.செந்தில்குமார் முன்னிலையில் உலக புத்தக தின விழா கல்லூரியில் கொண்டாடப்பட்டது.இவ்விழாவில், கல்லூரி நூலகத்தில் விஞ்ஞானிகள், நோபல் பரிசு பெற்றவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், பொருளாதார வல்லுநர்கள் மற்றும் சமூக சீர்திருத்தவாதிகளால் எழுதப்பட்ட நூல்கள் பற்றிய கண்காட்சி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சேலம் சோனா கல்லூரியில் நூலகத்தை அதிகம் பயன்படுத்திய பேராசிரியர்கள், மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.