tamilnadu

img

கும்கியாக மாற்றப்பட்ட காட்டு யானை மீண்டும் கோவைக்கு வரவழைப்பு

கோவை, ஆக.3- கோவை வனப்பகுதியில் வனத்துறையினரால் பிடிக்கப்பட்டு கும்கியாக பயிற்சியளிக்கப்பட்ட யானை  மீண்டும் கோவைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கோவை தடாகம் வனப்பகுதியில் கடந்த சில ஆண்டுக ளுக்கு முன்பு சுயம்பு என்கிற காட்டு யானை 8 வயது இருக்கும் போது வனத்துறையினரால் பிடிக்கப்பட்டது. பின்னர், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள யானை கள் முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு, கும்கியாக பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த நிலையில், சுமார் 13 ஆண்டு களுக்குப் பிறகு, கோவையில் நிகழும் மனித - யானை மோதலை தடுப்பதற்காக சுயம்பு யானை கோவைக்கு அழைத்து வரப்பட்டுள்ளது. சாடிவயல் யானைகள் முகாமில் தங்க வைக்கப்பட் டுள்ள சுயம்புவுடன், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து வெங்கடேசன் என்கிற மற்றொரு கும்கி யானை யும் விரைவில் கொண்டு வரப்பட இருக்கிறது. இன்னும் 2 ஆண்டுகளுக்கு சுயம்பு மற்றும் வெங்கடேசன் ஆகிய கும்கி கள் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து மனித - யானை மோதல் நடக்காமல் தடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன.