tamilnadu

img

காஷ்மீரில் அமைதி நிலவுவதாகக் கூறுபவர்கள் ஏன் தலைவர்களை அனுமதிக்கவில்லை?

அவிநாசி, ஆக.11- காஷ்மீரில் அமைதி நிலவு வதாகக் கூறுபவர்கள் ஏன் தலை வர்களை அனுமதிக்கவில்லை? என பி.ஆர்.நடராஜன் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவிநாசி தலைமை அலு வலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போது கோவை நாடா ளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடரா ஜன் கூறியதாவது,  மத்திய பாஜக அரசாங்கம் தொடர்ந்து மொழித் திணிப்பு, மாநில அரசாங்கத்தின் அதி காரப் பறிப்பு மற்றும் சிறுபான்மை  மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரு மான்மை மக்கள் மத்தியில் இந்து உணர்வை உண்டாக்கி, பதற்றத் தில் நாட்டை வைத்துக் கொண்டி ருக்க விரும்புகிறார்கள். இந்த நாட்டின் தேச விடுதலைப் போராட்டக் காலத்தில் நேரு தலை மையில் காஷ்மீருக்கு கொடுக்கப் பட்ட வாக்குறுதியான 370 என்ற  சட்டம் சிறப்புத் தனி அந்தஸ்து  பறிக்கப்பட்டுள்ளது.  கோவையில் மிகப்பெரிய பணக்காரர்களாக இருந்தவர்கள் யாரும் மேற்குத் தொடர்ச்சி மழையை பாதி வாங்க வேண்டும் என நினைக்கவில்லை. மேற்குத் தொடர்ச்சி மழையின் பாதி யாரி டம் உள்ளது என்றால், ஆன்மீகம் பேசக் கூடிய மத குருமார்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. அவர் கள் பன்னாட்டு மூலதனத்தோடு தொடர்புடையவர்களாக உள் ளார்கள். இது போன்று தான் காஸ்மீரில் நடக்கிறது.  இந்தியா முழுவதும் மிகப் பெரிய பொருளாதார பின்ன டைவு ஏற்பட்டுள்ளது. நாடுமுழு வதும் கடுமையான வேலையில் லாத் திண்டாட்டம், பணியில் இருப்பவர்கள் வெளியே அனுப் பப்படுகிறார்கள். இவைகளை யெல்லாம் மறைக்கத்தான்  மதப்பதற்றத்தை ஏற்படுத்தியுள் ளார்கள். எந்தக் காரணத்தைக் கொண்டும் இந்த மதவாத சக்தி களை நம்ப வேண்டாம். காஷ்மீர்  உண்மை நிலையை அறிவதற் காக, சென்ற சீதாராம் யெச்சூரி, சிபிஐ பொதுச் செயலாளர் ராஜா  ஆகியோர் விமான நிலையத்தி லேயே கைது செய்யப்பட்டார் கள். காஷ்மீருக்குள் அமைதி நில வுவதாகக் கூறுகிறார்கள், ஆனால் கட்சித் தலைவர்கள் ஏன் அனு மதிக்கப்படவில்லை?  சிறு, குறு வியாபாரிகள் உள் ளிட்ட 5லட்சம் பேருக்கு வேலை யிழப்பு ஏற்பட்டுள்ளது. இதை மாநில அரசே சட்டப் பேரவை யில் கூறியுள்ளது. அத்திக்கடவு அவிநாசித் திட்டம் முந்தைய திட்டப்படி, கொண்டு வந்தால் மட்டுமே நிலத்தடிநீர் மட்டும் உய ரும். மாநில அரசு காலிங்கராயன் வாய்க்கால் வழியாக திட்டத்தை  செயல்படுத்துவதாக பொய்யு ரைத்து,  5 ஆண்டுகள் மக்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள். இவ் வாறு அவர் பேசினார்.  இச்சந்திப்பில் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் கே.காம ராஜ், மாவட்டக் குழு உறுப்பினர் பி.முத்துசாமி, ஒன்றிய செயலா ளர் வெங்கடாசலம் ஆகியோர் பங்கேற்றனர்.