கோவை, மார்ச் 21- கோவை மாநகராட்சியில் கொரோனா நோய் வைரஸ் தடுப்பு முன்னேற்பாடு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகி றது என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தகவல் தெரிவித்துள்ளார். கோவை மாநகராட்சியில் கொரோனா நோய் வைரஸ் தடுப்பு முன்னேற்பாடு பணிகள் சுகாதார அலு வலர்கள், சுகாதாரப் பணியாளர்க ளால் மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் நாள்தோறும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநக ராட்சியில் மக்கள் அதிகம் கூடும் இடங் களான ரயில் நிலையங்கள், அனைத்து பேருந்து நிலையங்கள் மற்றும் பேருந்து நிறுத்தங்களின் நிழற்குடை கள், மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் போன்ற இடங்களில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நட வடிக்கையாக கிருமி நாசினி மருந்து கள் தெளிக்கும் பணிகளையும், விழிப் புணர்வு துண்டு பிரசுரங்கள் விநி யோகிக்கும் பணிகளையும் சுகாதாரப் பணியாளர்கள் மேற்கொண்டு வரு கின்றனர். கோயம்புத்தூர் மாநகராட்சியி லுள்ள அனைத்து பூங்காக்கள், வ.உ.சி. உயிரியல் பூங்கா, மாநகராட்சி உடற் பயிற்சி கூடங்கள், வணிக வளாகங் கள், திரையரங்குகள், கல்வி நிறுவ னங்கள், பள்ளிகள் அனைத்தும் வரு கிற மார்ச் 31 ஆம் தெதி வரை செயல் படாது. மாநகராட்சியின் அனைத்து மண்டல அலுவலகங்களிலும் பொது மக்கள் கைகளை கழுவுதல் மற்றும் மருத்துவ பரிசோதனைகள் மருத்துவ குழுவினாரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சியிலுள்ள 32 ஆரம்ப சுகாதார நிலையங்க ளில் பணியாற்றும் பணியாளர்கள், செவிலியர்களின் மருத்துவக்குழுவி னர் சம்மந்தப்பட்ட மண்டலங்களில் பொதுமக்கள் அனைவரும் தனிநபர் சுகாதாரத்தை பேணும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்திட கைகளை சோப்பு அல்லது கிருமி நாசினிகள் கொண்டு கழுவி தூய்மையாக பரா மரிக்க வலியுறுத்தி செயல்முறை விளக் கப் பணிகளும் நடைபெற்று வருகி றது. கோவை மாநகராட்சியில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகளை மருத்துவர்கள், செவிலியர்கள், மாநக ராட்சி அலுவலர்கள், தூய்மைப் பணி யாளர்கள் போர்க்கால அடிப்படை யில் மாநகராட்சியின் அனைத்து பகுதி களிலும் மேற்கொண்டு வருகிறார்கள் என மாநகராட்சி ஆணையாளர் மற் றும் தனிஅலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தெரிவித்துள்ளார்.