கோவை, ஏப்.12-மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கோவை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் பி.ஆர்.நடராஜனை ஆதரித்துமாணவர்கள் மற்றும் ஐடி ஊழியர்கள்மத்தியில் மாணவர் சங்கத்தினர் வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.இந்திய மாணவர் சங்கத்தினர் கோவைமாவட்டத்திலுள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களில் பயிலும், முதல்முறையாக வாக்களிக்கவுள்ள இளம் வாக்காளர்களை சந்தித்து பேசினர். அப்போது, மத்திய,மாநில அசுகளின் தவறான கொள்ளைகளின் காரணமாக கல்வித்துறையில் ஏற்பட்டிருக்கக்கூடிய நெருக்கடிகள் மற்றும் கல்வி தனியார் மயமாக்கப்படுவதால் உண்டாகும் அபாயத்தை விளக்கி பிரச்சாரம் மேற்கொண்டனர். மேலும், இந்த அபாயங்களிலிருந்து கல்விதுறையை பாதுகாக்க மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜனை வெற்றிபெற செய்யுமாறு மாணவர்களிடம் வேண்டுகோள் விடுத்தனர். இதேபோல், ஐடி துறையில் ஏற்பட்டிருக்கக்கூடிய நெருக்கடிகள், பாதிப்புகள் குறித்து விளக்கி ஐடி நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மத்தியில் பிரச்சாரம் மேற்கொண்டனர். இது இளம்வாக்காளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. முன்னதாக, இந்த பிரச்சார இயக்கத்தில் மாணவர் சங்கத்தின் மாவட்ட தலைவர் தினேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.