நாமக்கல், பிப்.27- நாமக்கல் மாவட்டம், பரமத்தி யில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் நீதிபதிகள் குடியிருப்புக் களுக்கான கட்டுமான பணியினை உயர் நீதிமன்ற நீதிபதி வியாழ னன்று அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். நாமக்கல் மாவட்டம், பரமத்தி யில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் நீதிபதிகள் குடியிருப்புக் களுக்கு ரூ.10.93 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான கட்டு மான பணியினை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.தாரணி, மின் சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத்துறை அமைச்சர்.பி. தங்கமணி, மாவட்ட ஆட்சியர் கா. மெகராஜ், முதன்மை மாவட்ட நீதிபதி கே.ஹெச்.இளவழகன், தலைமை குற்றவியல் நீதிபதி எ.பி.லதா, காவல் கண்காணிப்பாளர் அர. அருளரசு ஆகியோர் முன்னி லையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி கூறியதாவது, பரமத்தி பகுதிக்கான ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைத்திட அடிக்கல் நாடப் பட்டுள்ளது.குமாரபாளையம் மற்றும் சேந்தமங்கலம் பகுதிகளில் தனிநீதிமன்றம் வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. குறிப்பாக சேந்தமங்கலம் பகுதியை பொருந்தவரையில் மலை வாழ் மக்கள் வாழும் பகுதி என்பதால் அவர்களின் நலன் கருதி சேந்தமங்க லத்திலும் தனிநீதிமன்றங்கள் அமைக்கும் பணி துவக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. இந்தாண்டு நாமக்கல், சேலம், தேனி ஆகிய இடங்களில் 3 சட்டக் கல்லூரிகளை அமைக்க உத்தரவிட பட்ட நிலையில், நாமக்கல்லில் தற் போது அரசு சட்டக்கல்லூரி செயல் பட்டு வருகின்றது. அதுமட்டுமின்றி தற்போது நாமக்கல் மாவட்டத்திற் கென தனியாக மருத்துவக்கல்லூரி அமைத்திட ஆணை வெளியிட்டு வருகின்ற 5ஆம் தேதியன்று தமிழக முதல்வர் அடிக்கல் நாட்ட உள்ளார். இன்றைய தினம் ரூ.10.93 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு நீதிமன்றம் அமைக்கப்படவுள்ளது என அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் எ.கே.பி. சின்ராஜ், திருச்செங்கோடு கோட் டாட்சியர் ப.மணிராஜ், அரசு வழக் கறிஞர்கள் தனசேகரன், சந்திர சேகரன், பரமத்தி பார் அசோசி யேசன் தலைவர் டி.எம்.சரவண குமார் உட்பட வழக்கறிஞர்கள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.