தாராபுரம், ஜூன் 25- தாராபுரம் சோளக்கடைவீதி வர்த்தகர் சங்க முப்பெரும் விழா ஞாயி றன்று நடைபெற்றது. தாராபுரம் வர்த்தக கழக திருமண மண்டபத்தில் சோளக்கடைவீதி வர்த்தகர் சங்கத்தின் 75 ஆண்டு வைர விழாவும், புதிய நிர்வாகிகள் தேர்வு, ஹஜ் யாத்திரை செல்லும் உறுப்பி னருக்கு வழியனுப்பு விழா என முப் பெரும் விழா நடைபெற்றது. இவ்விழா விற்கு முன்னாள் நகர்மன்றத் தலைவர் வெங்கிடுசாமி தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற மாவட்ட சித்த மருத்துவ அதிகாரி தங்கராசு சங்கத்தின் பணிகள் குறித்து வாழ்த்தி பேசினார். இதையடுத்து புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டன. தலைவராக அகமது இப்ராகிம், செயலாளராக செல்லமுத்து, பொருளாளராக கலீல் ரகுமான், உதவி தலைவர் சுப்பிர மணியன், உதவி செயலாளர் முகமது இக்பால், கௌரவ தலைவர்களாக சங்கரலிங்கம், சுலைமான், நிர்வாக இயக்குநராக தனபால் உள்பட 14 பேர் கொண்ட குழு தேர்வு செய்யப்பட்டது. சங்கத்தின் 75ஆவது ஆண்டு அறிக்கை சமர்ப்பிக்கப் பட்டது. ஹஜ் யாத்திரை செல் வோருக்கு சங்கத்தின் சார்பில் பாராட்டி பொன்னாடை அணிவித்து பரிசுகள் வழங்கப்பட்டது. நிறைவாக செயலாளர் செல்லமுத்து நன்றி கூறினார்.