கோவை, மே 7-கணவரின் மரண விவகாரத்தைக் கைவிடக்கோரி டி.எஸ்.பி மூலம் பேரம் பேசுவதாக மார்ட்டின் நிறுவன காசாளரின் மனைவி பரபரப்பு பேட்டியளித்துள்ளார். மார்ட்டின் நிறுவனத்தின் காசாளர் பழனிசாமி கடந்த 3-ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது மரணத்தில் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி பழனிசாமியின் உறவினர்கள் மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யாவிடம் திங்களன்று மனு அளித்தனர். இதனைத் தொடர்ந்து, உயிரிழந்த காசாளர் பழனிசாமியின் மனைவி சாந்தாமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் மார்ட்டின் குழுவில் உள்ள அனைவரின் மீதும் எங்களுக்கு சந்தேகம் உள்ளது. மார்ட்டின் நிறுவனத்தில் பணிபுரிந்த குறிப்பிட்ட நபர்களை கைது செய்ய வேண்டும். மார்ட்டின் மற்றும் அவரது மனைவியைக் கைது செய்ய வேண்டும். வருமான வரித்துறையினர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என் கணவரின் மரணத்திற்கு நீதி வேண்டும். இதற்கிடையே மணி என்கிற டிஎஸ்பிஎங்களின் ஆதரவாளருக்கு பணம் தருவதாகப் பேசி வருகிறார். அதேபோலமிரட்டல் விடுக்கிறார். இது தொடர்பாகநாங்கள் புகார் அளித்தும் சம்பந்தப்பட்டடிஎஸ்பிமீதுஇதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க ஐ.ஜியிடம் வலியுறுத்தியுள்ளோம். என் கணவரைவருமான வரித்துறை அதிகாரிகள் அடித்துசித்திரவதை படுத்தியுள்ளனர். எனவே, வருமான வரித்துறை அதிகாரிகளையும் கைது செய்ய வேண்டும். மேலும், மார்ட்டின் நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் ஏற்கனவே, என் கணவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததுடன், உன் குடும்பத்தை கடைசியாக பார்த்துவிட்டு வருமாறும் எச்சரித்திருந்தனர் என அவர் தெரிவித்தார்.