tamilnadu

img

விருது வழங்கும் விழா 

 நன்னிலம், செப்.9- நன்னிலம் வள்ளலார் குருகுலம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் 8ம் ஆண்டு பொறியாளர் மு.சுந்தரராஜன் நினைவு விருது வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு வீதிவிடங்கன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தியாகராஜன் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரி யர் கழக தலைவர் சக்திவேல், துணைத்தலைவர் சந்திரமோகன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் அண்ட குடி கணபதி தாயுமானவன் என்ற நூலை வெளியிட முன்னாள் மாவட்ட கல்வி அலுவலர் இராமசாமி பெற்றுக் கொண்டார்.  சேலம் பாரதியார் மகளிர் கலை மற்றும் அறிவியில் கல்லூரி பேராசி ரியை ரகமத்பீவி விழா பேருரை ஆற்றினார். நன்னிலம் பேரூராட்சி முன்னாள் தலைவர் ராணி சுவாதி கோபால், நன்னிலம் சொக்க லிங்கம், நன்னிலம் ரோட்டரி சங்க சாசன தலைவர் சுப்பிரமணியம், வர்த்தக சங்க பொருளாளர் ராதாகிருஷ்ணன், கிராம சமுதாய கமிட்டி முன்னாள் தலைவர் சேகர், தமாக மாவட்டச் செயலாளர் கதிரவன், மணல் வண்டி உரிமையாளர் சங்க தலைவர் வைரம், மதியழகன், தமிழ்நாடு கிராம பணி யாளர் சங்க மாநில ஆலோசகர் முருகையன், பொதுப்பணித்துறை தணிக்காசலம், ரோட்டரி கிளப் தலைவர் ஜானி சாம்சன், தூய வாழ்வு அறக்கட்டளை செயலாளர் கேசவராஜ், அரசு போக்குவரத்து கழக பன்னீர் செல்வம், முடிகொண்டான் கிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி னர்.  10ம் மற்றும் 12ம் வகுப்பில் சிறப்பு மதிப்பெண் பெற்ற 163 மாணவ - மாணவிகளுக்கு விருதும் சான்றிதழும் வழங்கப்பட்டது. சிறப்பாக பணியாற்றிய அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் 15 பேருக்கு பொறியாளர் முசுந்தரராஜன் நினைவு விருது வழங்கப்பட்டது. ஆதம்பாவூர் ராமன் நன்னிலம் சந்தான குமார் நன்னிலம் ஜெயசீலன் ஆகிய மூவ ருக்கும் சிறந்த சமுதாய பணிக்கான விருதும் விளாகம் முத்துக்குமாரசாமி அதம்பார் நடராஜன் ஆகியோருக்கு சிறந்த சன்மார்க்க பணிக்கான விருதும் நல்லாசிரியர் முனைவர் மா.அருணாச்சலம் நல்லாசிரியர் த.பாலச்சந்திரன் நல்லாசிரியர் ராமலிங்கம் ஓவிய ஆசிரியர் பாலகேச வன் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கி கௌர விக்கப்பட்டது. முன்னதாக வள்ளலார் குருகுல கல்வி நிறுவனங்களின் செய லாளர் பாரி வரவேற்று பேசினார். சென்னை எம்.ஏ அறநிலைய அறங்காவ லர் செந்தில் நன்றி கூறினார்.