tamilnadu

img

சிபிஎம் வேட்பாளர் பி.ஆர்.நடராஜனுக்கு டாஸ்மாக் ஊழியர் சங்கம் ஆதரவு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கோவை நாடாளுமன்ற தொகுதி மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பி.ஆர்.நடராஜனுக்கு, டாஸ்மாக் ஊழியர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் சிறப்பு பேரவை கூட்டம்கோவை சுந்தரம் வீதியில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கோவை நாடாளுமன்ற தொகுதி மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர்பி.ஆர்.நடராஜனுக்கு ஆதரவுதெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணனிடம் தேர்தல் நிதியாக கோவை மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் சார்பில் 50 ஆயிரம் ரூபாய் முதல்தவணையாக அளிக்கப்பட்டது. இதேபோல், டாஸ்மாக் ஊழியர் சம்மேளனத்தின் சார்பில் வேட்பாளருக்கான பிணைத்தொகையாக ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்டது. மேலும், நீலகிரி மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் சார்பில் ரூ.10 ஆயிரம் தேர்தல் நிதியாக வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் டாஸ்மாக் ஊழியர் சங்க பொதுச்செயலாளர் திருச்செல்வன், சிஐடியு கோவை மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, டாஸ்மாக் ஊழியர் சங்க கோவை மாவட்ட செயலாளர் ஜான்அந்தோணி ராஜ், நீலகிரி மாவட்ட செயலாளர் ஆல்துரை உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.