குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி
சேலம், நவ.22- விபத்தை ஏற்படுத்திய நபர் மீது நடவடிக்கை எடுக் காத காவல்துறையை கண்டித்து சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு குடும்பத் துடன் தீக்குளிக்க முயற் சித்த சம்பவம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம், அய்யம்பெருமாள்பட்டி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் கடந்த 5 ஆம் தேதி அரியானூர் சூளைமேடு பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் வந்த கார் மோதியதில் பலத்த காயமடைந்துள்ளார். இந்த விபத்தினை ஏற்படுத்திய பெண் மருத்துவர் மீது நடவ டிக்கை எடுக்க வலியுறுத்தி கொண்டலாம் பட்டி காவல்நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார். ஆனால் கொண்டலாம் பட்டி காவல்துறையினர் விபத்து ஏற்ப டுத்திய பெண் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் தங்களை கொண்டலாம்பட்டி உதவி ஆய்வாளர் ராமகிருஷ்ணன் மிரட்டு வதாக கூறி அவரது மனைவி மற்றும் கைக் குழந்தை உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றனர். சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணி யில் இருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். ஆட்சியர் அலுவலகம் முன்பு தம்பதி மற்றும் கைக் குழந்தையுடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.