கோவை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
கோவை, மார்ச் 11- கோவையின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நடவடிக்கையில் யாரேனும் ஈடுபட்டால் தயவு தாட்சனைன்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத் துள்ளார். இதுதொடர்பாக புதனன்று நடைபெற்ற செய்தி யாளர் சந்திப்பில் கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி கூறியதாவது, கோவை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் அமைதி பேணிக் காக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை உரிய நட வடிக்கை எடுத்து வருகிறது. அதேநேரம், கோவை யில் அங்கொன்றும் இங்கொன்றுமாக விரும்ப தகாத செயல்கள் நடந்து வருகிறது. அனைத்து பகுதிகளி லும் அனைத்து தரப்பு மக்களும், அச்சமின்றி அமைதி யாக இருக்க காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வா கம் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும், ஆதரவா கவும் போராட்டங்கள் நடந்து வருகிறது. இரு தரப் பின் கோரிக்கைகளும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதேபோல், அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கை காக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென இருதரப்பினரிடமும் கேட்டுக் கொள் ளப்பட்டுள்ளது. இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கு வதாக இரு தரப்பினரும் உறுதியளித்துள்ளனர்.
அமைதி ஒன்றே நோக்கம்
இயல்பு நிலை திரும்ப கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அமைதி நிலவ வேண்டும் என்பதைதான் மக்கள், மாவட்ட நிர்வாகம், அரசு எதிர்பார்க்கிறது. ஆகவே, அமைதிக்கு பங்கம் விளை வித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். காவல் துறை முறையான நடவடிக்கை எடுத்து வருகிறது. வன்முறை சம்பங்களில் ஈடுபடுபவர்களை அடையா ளம் கண்டு காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகி றது. இன்னும் சில வழக்குகளில் தொடர்புடைய குற்ற வாளிகளை கண்டறிய தனிப்படை அமைக்கப்பட் டுள்ளது. அமைதிக்கு பங்கம் விளைவித்தால் தயவு தாட்சனையின்றி நடவடிக்கை எடுக்கப்படும். அமைதி ஒன்றே நோக்கம். அதை சிதைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்ட மாட்டோம். மக்கள் அச்சமின்றி இருப்ப தற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப் படும்.
சமூக வலைதளங்களில் விஷம பிரச்சாரம்
குறிப்பாக, அமைப்பினர் பெயரை சொல்லி ஒரு சிலர் தவறான செயல் , சமூக வலைதளங்களில் வன் முறையை தூண்டும் வகையில் உண்மைக்கு புறம் பான தவறான தகவல்கள் மற்றும் விஷம பிரச்சாரம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக் கப்படும். இதேபோல், உண்மைக்கு புறம்பான செய் திகளை ஊடகங்கள் கவனமான அணுக வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கூறினார்.
ஒருவர் கைது
இதற்கிடையே, இந்து முன்னணியின் கோவை மாவட்ட செயலாளர் ஆனந்த், அண்மையில் தாக்கப் பட்டார். இதுதொடர்பான வழக்கில் கரும்புக்கடை அண்ணா காலனியைச் சேர்ந்த நூர்முகமது (30) என்ப வர் கைது செய்யப்பட்டுள்ளார்.