கோவை, செப்.7- கோவை மாநகராட்சியின் 100 சதவிகித அநியாய சொத்துவரி உயர்வை கண்டித்தும், குடிநீர் விநி யோகத்தை சூயஸ் பன்னாட்டு நிறு வனத்திடம் வழங்கப்பட்டதை கண் டித்தும் செப்.27 ஆம் தேதியன்று கோவையில் முழு அடைப்பு போராட் டம் நடத்துவது என மதச்சார்பற்ற முற் போக்கு கூட்டணி கட்சியின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திமுக தலைமையிலான மதச்சார் பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிக ளின் கூட்டம் கோவை டாடாபாத்தில் உள்ள திமுக மாவட்ட கழக அலுவ லகத்தில் சனியன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திமுக மாநகர் மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் முன்னிலை வகித் தார். திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் நா.பழனிசாமி, கோவை புறநகர் தெற்கு மாவட்ட பொறுப் பாளர் தென்றல் செல்வராஜ், நாச்சி முத்து, காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், மதிமுக மாவட்டச் செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார், மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் வி.இராமமூர்த்தி, மாவட்டக் குழு உறுப்பினர் யு.கே.சிவஞானம், கிழக்கு நகர செயலாளர் என்.ஜாகீர், வடக்கு நகர செயலாளர் என்.ஆர். முருகேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொருளாளர் எம். ஆறுமுகம், தங்கவேல், கொ.ம.தே.க. மாவட்டச் செயலாளர்கள் பிரேம், தனபால், தி.க.சிற்றரசு, இந்திய யூனி யன் முஸ்லிம் லீக் முகமது பஷீர், மனித நேய மக்கள் கட்சியின் ஜெம். பாபு, த.பெ.தி.க.பொதுச் செயலாளர் கோவை கு.ராமகிருட்டிணன், ஆதித் தமிழர் பேரவை க.இனியவன், இந் திய ஜனநாயக கட்சியின் சிவா உள்ளிட்ட கூட்டணி கட்சியின ரின் நிர்வாகிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானம் வருமாறு, மக்களை பெரிதும் பாதிக்கின்ற வகையில் கோவை மாநகராட்சி 100 சதவிகித சொத்து வரி உயர்வை சுமத்தியுள்ளது. இவற்றை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். மேலும், பிரான்ஸ் நாட் டைச் சேர்ந்த “சூயஸ்” எனும் தனியார் நிறுவனத்திற்கு வழங்கியுள்ள குடிநீர் பராமரிப்பு ஒப்பந்தத்தை ரத்து செய் யக் கோரியும், வரும் செப்டம்பர் 27 ஆம் தேதியன்று கோவையில் முழு அடைப்பு போராட்டம் நடத் துவது. அதே தினத்தன்று கோவை மாநகராட்சியில் பரவலாக அனைத்து பகுதிகளிலும் சாலை மறியல் போராட் டத்தை மக்களை திரட்டி வலிமையாக நடத்துவது என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. முன்னதாக, செப்.16 ஆம் தேதி முதல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதி களில் வட்ட அளவில் கூட்டங்கள் நடத்துவது மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் மாநக ராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து நிறுவனங்களின் கூட்டமைப்பு, தொழில் கூட்ட மைப்பு, வணிகர் பேரவை, குடியிருப் போர் சங்கங்கள் உள்ளிட்ட நிர்வாகி களை சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு திரட்டுவது என முடிவெடுக் கப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தின் இறுதியில் திமுக மாநகர் மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ பேட்டியளித்தார், அப்போது அவர் கூறுகையில், கோவை மாநக ராட்சியில் பொதுமக்களை பாதிக்கும் வகையில் 100 சதவிகிதம் வரி உயர்வை ஏற்றியுள்ளனர். ஆனால், கோவை மாநகராட்சி பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைகளை பூர்த்தி செய்யவில்லை. குப்பைகள் மாநக ராட்சி முழுவதும் மலைபோல் தேங்கி கிடக்கின்றது. சுகாதார சீர்கேட்டின் புகழிடமாக கோவை மாநகராட்சி திகழ்கின்றது. இப்படி இருக்க, 100 சதவிகித வரி உயர்வு என்பதை ஏற் றுக்கொள்ள முடியாது. மேலும் குடிநீர் விநியோகத்தை வெளிநாட்டு நிறுவனமான சூயஸ் நிறுவனத்திற்கு 26 ஆண்டுகளுக்கு 3 ஆயிரத்து 150 கோடி ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டுள்ளதை ரத்து செய்ய வேண்டும். உள்ளாட்சி தேர்தல் முறையாக நடத்தாமல், உள்ளாட்சித்துறை அமைச்சர் தனது இஷ்டம்போல மக்களுக்கு விரோ தமான திட்டங்களை நிறைவேற்று கிறார். மாநகராட்சி அதிகாரிகளும் இதற்கு உடந்தையாக உள்ளனர். ஆகவே மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தொடர் போராட்டங் கள் நடத்தப்படும் என்றார்.