உடுமலை, ஆக.17- உடுமலையில் அரசு அனுமதி வழங்காத இடங்களிலிருந்து வண்டல் மண் எடுக்கப்படுவதை வருவாய்த்துறை கண்டுக் கொள்ளாமல் இருப்பதாக விவசா யிகள் குற்றம்சாட்டி உள்ளனர். தமிழக அரசு கடந்த மாதம் உடுமலை வருவாய் கோட்டத் திற்குட்பட்ட திருமூர்த்தி அணை, உப்பாறு அணை, கரிசல் குளம், வளையபாளையம் குளம் உள் ளிட்ட பகுதிகளில் விவசாய தேவைகளுக்கு வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கியது.
இதன்படி திருமூர்த்தி அணையில் 50,600 கன மீட்டரும், உப்பாறு அணையில் 29,579 கன மீட்ட ரும், பெரிய குளத்தில் 99,000 கன மீட்டரும், கரிசல் குளத்தில் 18,750 கனமீட்டரும், வளைய பாளையம் குளத்தில் 7,900 கன மீட்டர் மட்டுமே வண்டல் மண் எடுப்பதற்கு அனுமதி வழங்கப் பட்டன. அதுவும் விவசாய பணி களுக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியிருந்தன. இந்நிலையில் உடுமலை அருகே உள்ள வடபூத நந்தம் வரு வாய் கிராமத்திற்கு உட்பட்ட பெரிய குளத்தில் கடந்த பத்து நாட் கள் வண்டல் மண் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சனி யன்று அரசு அனுமதி பெறாமல் சின்னவாளவாடி வருவாய் கிரா மம் (க.ச. எண் 16/1) ஏரி புறம் போக்கு நிலத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகளை கொண்டு வண்டல் மண்களை எடுத்து உள்ளனர். இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் வருவாய்த் துறை அடிகாரியிடம் தகவல் தெரி வித்துள்ளனர். ஆனால் வருவாய்த் துறை அதிகாரிகள் எவ்வித நடவ டிக்கையும் எடுக்காமல் அமைதி காத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி விவ சாயிகள் கூறுகையில், விளை நிலங்களுக்கு வண்டல் மண் எடுக்க பல முறை அனுமதி கேட் டும் வருவாய்த்துறையினர் அனு மதி வழங்க மறுத்து வந்தனர். ஆனால் சனியன்று காலை முதல் வண்டல் மண்களை எடுத்து செல் கிறார்கள். இதை அனைத்து அதி காரிகளும் கண்டு கொள்ளாமல் உள்ளனர் என தெரிவித்தனர். இதுகுறித்து உடுமலை வட் டாட்சியர் தயானந்தனிடம் கேட்டபோது, வண்டல் மண் எடுப்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. உடனடியாக அப்பகுதி அதிகாரிகளிடம் விசாரணை செய் கிறேன் என கூறினார். இதன்பின் உடுமலை வருவாய் கோட்டாட் சியர் அலுவலகத்திற்கு இது குறித்து தகவல் அறிய தொலை பேசி மூலம் அழைத்த நிலையில் அழைப்பை எடுக்கவில்லை. முன்னதாக, கடந்த மாதம் உடு மலை பாலாற்றில் மணல் கொள்ளை நடக்கிறது என விவ சாயிகளிடம் இருந்து பல புகார்கள் தெரிவித்தனர். இதனால் உடு மலை வட்டாட்சியர் மாற்றப்பட் டார். தற்போது புதிய வட்டாட்சி யராக பொறுப்பு ஏற்று ஒரு வார காலத்தில் மீண்டும் அதே போன்று மணல் கொள்ளை நடைபெறுவ தால் விவசாயிகளை வேதனைப் பட வைத்துள்ளது. இது போன்று இரண்டு அணைகள் மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலை என்று அதிகமாக இயற்கை வளங்களை கொண்ட பகுதியாக உள்ளதால் இவற்றை பாதுகாக்க நேர்மை யான அதிகாரிகளை நியமனம் செய்ய வேண்டும் என்றும், தவறு களில் ஈடுபடும் அதிகாரிகள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.உடுமலை, ஆக.17- உடுமலையில் அரசு அனுமதி வழங்காத இடங்களிலிருந்து வண்டல் மண் எடுக்கப்படுவதை வருவாய்த்துறை கண்டுக் கொள்ளாமல் இருப்பதாக விவசா யிகள் குற்றம்சாட்டி உள்ளனர். தமிழக அரசு கடந்த மாதம் உடுமலை வருவாய் கோட்டத் திற்குட்பட்ட திருமூர்த்தி அணை, உப்பாறு அணை, கரிசல் குளம், வளையபாளையம் குளம் உள் ளிட்ட பகுதிகளில் விவசாய தேவைகளுக்கு வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கியது. இதன்படி திருமூர்த்தி அணையில் 50,600 கன மீட்டரும், உப்பாறு அணையில் 29,579 கன மீட்ட ரும், பெரிய குளத்தில் 99,000 கன மீட்டரும், கரிசல் குளத்தில் 18,750 கனமீட்டரும், வளைய பாளையம் குளத்தில் 7,900 கன மீட்டர் மட்டுமே வண்டல் மண் எடுப்பதற்கு அனுமதி வழங்கப் பட்டன. அதுவும் விவசாய பணி களுக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியிருந்தன. இந்நிலையில் உடுமலை அருகே உள்ள வடபூத நந்தம் வரு வாய் கிராமத்திற்கு உட்பட்ட பெரிய குளத்தில் கடந்த பத்து நாட் கள் வண்டல் மண் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சனி யன்று அரசு அனுமதி பெறாமல் சின்னவாளவாடி வருவாய் கிரா மம் (க.ச. எண் 16/1) ஏரி புறம் போக்கு நிலத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகளை கொண்டு வண்டல் மண்களை எடுத்து உள்ளனர். இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் வருவாய்த் துறை அடிகாரியிடம் தகவல் தெரி வித்துள்ளனர். ஆனால் வருவாய்த் துறை அதிகாரிகள் எவ்வித நடவ டிக்கையும் எடுக்காமல் அமைதி காத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி விவ சாயிகள் கூறுகையில், விளை நிலங்களுக்கு வண்டல் மண் எடுக்க பல முறை அனுமதி கேட் டும் வருவாய்த்துறையினர் அனு மதி வழங்க மறுத்து வந்தனர். ஆனால் சனியன்று காலை முதல் வண்டல் மண்களை எடுத்து செல் கிறார்கள். இதை அனைத்து அதி காரிகளும் கண்டு கொள்ளாமல் உள்ளனர் என தெரிவித்தனர்.
இதுகுறித்து உடுமலை வட் டாட்சியர் தயானந்தனிடம் கேட்டபோது, வண்டல் மண் எடுப்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. உடனடியாக அப்பகுதி அதிகாரிகளிடம் விசாரணை செய் கிறேன் என கூறினார். இதன்பின் உடுமலை வருவாய் கோட்டாட் சியர் அலுவலகத்திற்கு இது குறித்து தகவல் அறிய தொலை பேசி மூலம் அழைத்த நிலையில் அழைப்பை எடுக்கவில்லை. முன்னதாக, கடந்த மாதம் உடு மலை பாலாற்றில் மணல் கொள்ளை நடக்கிறது என விவ சாயிகளிடம் இருந்து பல புகார்கள் தெரிவித்தனர். இதனால் உடு மலை வட்டாட்சியர் மாற்றப்பட் டார். தற்போது புதிய வட்டாட்சி யராக பொறுப்பு ஏற்று ஒரு வார காலத்தில் மீண்டும் அதே போன்று மணல் கொள்ளை நடைபெறுவ தால் விவசாயிகளை வேதனைப் பட வைத்துள்ளது. இது போன்று இரண்டு அணைகள் மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலை என்று அதிகமாக இயற்கை வளங்களை கொண்ட பகுதியாக உள்ளதால் இவற்றை பாதுகாக்க நேர்மை யான அதிகாரிகளை நியமனம் செய்ய வேண்டும் என்றும், தவறு களில் ஈடுபடும் அதிகாரிகள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.