tamilnadu

மத்திய பல்கலைக்கழகத்துடன் இணைக்க வேண்டும் சர்தார் வல்லபாய் படேல் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

 கோவை, பிப். 16– கோவையில் மத்திய ஜவுளித் துறையின் கீழ் இயங்கிவரும் சர் தார் வல்லபாய் படேல் கல்லூ ரியை திருவாரூரில் உள்ள தமிழ் நாடு மத்திய பல்கலைக்கழகத் துடன் இணைக்கக்கோரி மாண வர்கள் இரண்டாவது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவையில், சர்தார் வல்ல பாய் படேல் சர்வதேச ஜவுளி மற் றும் மேலாண்மை கல்லூரி கடந்த 2002-ம் ஆண்டு துவங்கப்பட்டது. மத்திய ஜவுளித்துறை அமைச்ச கத்தின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் இந்த கல்லூரியில் பி.எஸ்.சி டெக்ஸ்டைல்ஸ், எம்.பி.ஏ அப்பேரல் மேனேஜ்மென்ட், எம்.பி.ஏ டெக்ஸ்டைல்ஸ் மேனேஜ்மென்ட், எம்.பி.ஏ ரிடெ யில் மேனேஜ்மென்ட் உள்ளிட்ட பாடப்பிரிவுகள் உள்ளன. இக்கல் லூரியில் தமிழகம் மட்டுமின்றி மேற்கு வங்கம், ஆந்திரா, அந்த மான் நிக்கோபர், ஒரிசா, இமாச் சல் பிரதேசம், தெலுங்கானா உட் பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 300 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். கல்வி கட் டணம் மற்றும் தேர்வு கட்டண உயர்வு,  அடிப்படை வசதிகள் இன்மை போன்ற காரணங்களால் கடந்த சில ஆண்டுகளாக இந்த கல்லூரியை திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழ கத்துடன் இணைக்கவேண்டும் என மாணவர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்தது. இந்நிலை யில் கோரிக்கையை வலியுறுத்தி வெள்ளியன்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் இரண்டாவது நாளாக சனியன்றும் தொடர்ந் தது.  இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கூறிய தாவது, முதலில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களில் 10 சதவிகிதம் பேருக்கு இங்கு படிப்ப தற்கு இடங்கள் ஒதுக்கப்பட்டு வந்தது. மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கல்லூரி தற்போது தனியார் கல்லூரி போலவே நடத் தப்பட்டு வருகிறது. திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்க லைக்கழகத்தில் பி.எஸ்.சி பாடத் திற்கு ரூ.3000-ம், எம்.பி.ஏ பாடத் திற்கு ரூ.6500-ம் பருவ கட்டண மாக வசூலிக்கப்படுகிறது. ஆனால், இங்கு பி.எஸ்.சி பாடத் திற்கு ரூ.17,000, எம்.பி.ஏ பாடத் திற்கு ரூ.75,000 வரை வசூலிக்கப் படுகிறது. இது தனியார் கல்லூரி கட்டணத்தை காட்டிலும் அதிகமா னதாகும்.  அதேபோல் தேர்வு கட்டணம் ரூ.3000 லிருந்து 4500 வரை வசூ லிக்கப்படுகிறது. ஆனால் மத்திய பல்கலைக்கழகத்தில் தாள் ஒன் றிற்கு ரூ.100 மட்டுமே கட்டண மாக உள்ளது. தற்போது இந்த கல்லூரிக்கு மத்திய பல்கலைக்கழ கத்திலிருந்து எந்த நிதியும் வரு வதில்லை. மாணவர்களுக்கு விடுதி வசதி இல்லை, மாணவிகள் விடுதியில் ஒரு அறையில் 8 முதல் 10 பேர் வரை தங்கியுள்ளனர். அதேபோல் கல்லூரியில் தொழில் நுட்பம் சார்ந்த தரமான ஆய்வகங் கள் எதுவும் கிடையாது. ஜவுளித் துறை தொழில்நுட்பங்கள் தெரிந்த எந்த பேராசிரியரும் நியமிக்கப்பட வில்லை, இயக்குனரும் ஜவுளித்து றைக்கு சம்பந்தமில்லாதவராகவே நியமிக்கப்பட்டுள்ளார்.  ஜவுளித்துறை சார்ந்த தொழில் நுட்ப வல்லுனர்களையும், தொழில்முனைவோரையும் உரு வாக்க வேண்டும் என்ற நோக்கத் தில் துவங்கப்பட்ட கல்லூ ரியை ஆராய்ச்சி மையமாக மாற்று வதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது. இவ்வாறு நடந்தால் மாணவர் சேர்க்கை நிறுத்தப்படு வதுடன், பட்டம் பெற்ற மாணவர் களுக்கு அங்கீகாரம் இல்லாமலும் போய்விடும். மேற்படிப்பு,பணி வாய்ப்பு ஆகியவை பாதிக்கப் படும்.எனவே, மத்திய பல்கலைக் கழக தேர்வு எழுதி பல்லாயிரம் கிலோ மீட்டர் தூரத்திலிருந்து படிக்க வந்துள்ள மற்றும் சாதா ரண பின்புலத்திலிருந்து வந்துள்ள மாணவ, மாணவிகளின் எதிர் காலத்தை கருத்தில் கொண்டு நட வடிக்கை எடுக்கவேண்டும் என்ற னர். இதற்கிடையே வரும் பிப்.27 ஆம் தேதி மத்திய பல்கலைக்கழகத் துடன் இணைக்கபடுவது குறித்த முடிவு எடுக்கப்பட உள்ளதாக கல் லூரி வட்டாரங்கள் தெரிவிக்கின் றன.