பொதுமக்கள் குற்றச்சாட்டு
சேலம், மார்ச் 20- கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை சேலம் மாநக ராட்சி மெத்தன போக்காக செயல் படுவதாக பொதுமக்கள் குற்றஞ் சாட்டியுள்ளனர். சேலம் மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளன. இதில் அஸ்தம் பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மா பேட்டை, சூரமங்கலம் என நான்கு மண்டலங்களில் துப்புரவு மற்றும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சேலம் மாநகரின் முக்கிய பகுதிகளில் புதிய மேம்பால பணிகள், ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள், பாதாள சாக்கடை திட்டத்திற்கான பணிகள் தற் போது நடைபெற்று வருகிறது. இதனால் நகரின் அனைத்துப் பகுதி களும் மாசடைந்த பகுதிகளாகவே காணப்படுகிறது. மேலும், முறை யாக துப்புரவு பணிகள் மேற் கொள்ளவில்லை. மாநகரத்தின் அநேக இடங்களில் குப்பைகள் நிறைந்தே காட்சியளிக்கிறது. மேலும் முறையான கால்வாய் வசதி இல்லாததால் கழிவுநீர் சாலையில் தேங்கி உள்ளது. இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றை பராவமால் தடுப்பதற்கு கிருமி நாசினியை மாநகராட்சி தெளித்து வருகிறது. அதேநேரம், மாநகர மக்களின் நலனைகளை பாதுகாக்க வேண்டிய மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்கள் கூடும் பேருந்து நிலையம், ரயில் நிலையம், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பகுதி களில் மட்டும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை முழுமை யாக மேற்கொண்டு வருகிறது. ஆனால் பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளில் எவ்வித நடவடிக்கை யும் எடுக்கவில்லை என பொது மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதுகுறித்து, சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்க தலைவர் எஸ். கே. தியாகராஜன் கூறுகையில், சேலம் மாநகராட்சி கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை அனைத்து பகுதிகளிலும் முழுமை யாக செய்யவில்லை. குறிப்பாக குடியிருப்பு பகுதிகளில் முறையாக கிருமிநாசினிகள் கூட தெளிக்கும் நடைமுறை இல்லாததால் நோய்த் தொற்று பரவும் சூழலே அதிகம் உள்ளது. இதேபோல், மாநகராட்சி யில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் பாதுகாப்பு உப கரணங்கள் இல்லாததால் முறை யாக துப்புரவு பணி மேற்கொள் வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, முக கவசம், கையுறை, கிருமிநாசினிகள் இவைகளை முறையாக வழங்கி துப்புரவு பணி களை மேற்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
இதுகுறித்து மாநகர பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். மேலும், நோய் தொற்றுகளை கட்டுப்படுத்த மாநகரில் குப்பைகளை உடனுக் குடன் அகற்ற வேண்டும். சாக்கடை கழிவுகளை அப்புறப்படுத்தி நடவ டிக்கை எடுப்பதுடன், பேரிடர் நிதியை முறையாக பயன்படுத்தி மக்களைப் பாதுகாக்க நோய் தடுப்பு மருந்து தெளித்திட வேண்டும் என தெரிவித்தனர். கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து பொதுமக்களிடையே மிகுந்த அச்ச உணர்வு ஏற்பட்டுள்ள இந்த சூழ்நிலையில் வழிபாட்டு தலங்கள், வணிக நிறுவனங்கள், திரையரங்குகள், பொழுதுபோக்கு கூடங்கள், பூங்காக்கள் உள்ளிட்ட வைகளில் பொதுமக்கள் கூடாத வண்ணம் மாவட்ட மற்றும் மாநக ராட்சி நிர்வாகம் தடைவிதித் துள்ளது. இது வரவேற்கத்தக்க நடவ டிக்கையாக இருப்பினும், பொது மக்கள் குடியிருப்பு பகுதிகளிலும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவ டிக்கைகளை முழுமையாக செயல் படுத்த வேண்டும் என்பதே அனை வரின் எதிர்பார்ப்பாக உள்ளது. -(ந,நி)