தருமபுரி, பிப்.25- நலவாழ்வு உரிமை மக்களின் அடிப் படை உரிமையாக்க வலியுறுத்தி சிறப்பு கருத்தரங்கம் தருமபுரியில் நடைபெற்றது. நலவாழ்வு உரிமை கூர்நோக்கம் குறித்த கருத்தரங்கம் தருமபுரி முத்து இல்லத்தில் நடைபெற்றது. தொண்டுநிறுவன கூட்ட மைப்பின் தலைவர் எம்.சங்கர் தலைமை வகித்தார். மக்கள் நலவாழ்வு இயக்க தேசியக்குழு உறுப்பினர் அமீர்கான், மாநில ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் ஆகியோர் கருத்துரையாற்றினர். அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.கிரைஸாமேரி, தொண்டு நிறுவன கூட்டமைப்பு நிர்வாகிகள் ஏ.சரவணன், ஆர்.தர்மலிங்கம், எம்.தனலட்சுமி, சரஸ்வதி, சிவக்குமார் ஆகியோர் வாழ்த்தி பேசினர். இதில்,தனியார் மருத்துவமனையை கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும் சுதந்திரமான முழுமையான முறைப்ப டுத்தும் அமைப்பை ஏற்படுத்த தமிழ் நாடு மருத்துவமனைகள் (திருத்த) முறை படுத்துதல் சட்டம் 2018ல் திருத்தம் மேற் கொண்டு உடனடியாக அமல்படுத்த வேண்டும். தமிழகம் முழுமைக்கும் ஒரே சேவைக் கட்டணத்தை நிர்ணயித்து அமல்படுத்த வேண்டும். தனியாருக்கு மக்கள் பணத்தை கொண்டு சேர்க்கும் காப்பீடு திட்டம் உட்பட அரசுத்துறை யில் தனியார்மயமாக்கலை தடுத்து நிறுத்த வேண்டும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நலவாழ்விற்கான நிதியை 5 சதவிகிதமாக உயர்த்த வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணிநேர மும் மருத்துவர்களை பணியில் அமர்த்த வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையம் உட்பட அனைத்து அரசு மருத்துவமனைக ளிலும் 4 மணிமுதல் 8 மணி வரை இயங்கும் மாலை நேர புறநோயாளிகள் சிகிச்சை உத் தரவாதப்படுத்த வேண்டும்.அரசு மருத்துவ மனைகளில் லஞ்சத்தை ஓழிக்கவேண்டும் என வலியுறுத்தினர்.