நாமக்கல், நவ.29- திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் உள்ள பிரேத பரிசோதனைக் கூடத்திற்கு எதிரில் நிழற் கூடம் அமைக்க வேண்டு மென பொதுமக்கள் கோரிக் கை விடுத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு- வேலூர் சாலையி்ல் அரசு மருத்து வமனை அமைந்துள்ளது. தினசரி நூற்றுக்கணக்கான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின் றனர். இதன் தெற்குப்புறம் பிரேத பரிசோதனைக் கூடம் மற்றும் ஏசி வசதியுடன் கூடிய பிணவறை உள்ளது. திருச்செங்கோடு, எலச்சிபாளையம், மல்லசமுத்திரம், பரமத்தி போன்ற பகுதிகளில் விபத்துகளால் இறப்ப வர்களின் சடலங்கள், அடையாளம் தெரி யாதவர்களின் உடல்கள் இங்கு பாதுகாப் பாக வைக்கப்படுகின்றன. வாகன விபத்து, தீ விபத்து ஆகியவற்றால் இறப்பவர்களின் சடலங்களையும், தற்கொலை செய்து கொள்பவர்களின் சடலங்களையும் பிரேத பரிசோதனை செய்யும் நிலையம் இங்குள்ளது. இந்த பிரேதப் பரிசோதனை கூடத்தில் ஏசி வசதியுடன் கூடிய புதிய கட்டிடம் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் ரூ.30 லட்சம் செலவில் கட்டப்பட்டது. கடந்த 2011 ஆம் ஆண்டு அப்போதைய நாமக்கல் ஆட்சியர் மதுமதி தலைமையில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் காந்திச் செல்வன் திறந்து வைத்தார். வாரத்திற்கு சராசரியாக 4 சடலங்கள் பிரேத பரிசோதனை செய்யப் படுகின்றன. பரிசோதனை முடிந்து சடலங் களை வாங்க வரும் குடும்பத்தினர், நண்பர்கள், ஊர்மக்கள் பிணவறை எதிரே உள்ள காலியிடத்தி்ல் காத்துக்கிடக்கும் நிலை உள்ளது. வெயில், மழையி்ல் குழந் தைகள், பெண்கள், வயதானவர்கள் உட் கார போதிய வசதியின்றி நின்று கொண்ட இருக்க வேண்டிய அவலம் உள்ளது. குடிநீர், கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் இ்ல்லை. எனவே பிணவறைக்கு எதிரே நிழற்கூடம் அமைத்துத் தரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத் துள்ளனர்.