கோவை, ஜூன் 3–அரசு பள்ளிக்கு வந்த மாணவர்களை சீர்வரிசையுடன் கோவைகேஜி.சாவடி மக்கள் வரவேற்ற சம்பவம் நெகிழ்ச்சியை உருவாக்கியுள்ளது. கோடை விடுமுறை முடிந்து திங்களன்று தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டது. இதில் கோவை எட்டிமடை அடுத்த கே.ஜி.சாவடியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளிக்கு வந்த மாணவர்களைஅந்த கிராம மக்கள் சீர் வரிசையுடன் வரவேற்றனர். பொதுமக்கள் ஒன்று கூடி ரூ. 1 லட்சம் மதிப்புள்ள அனைத்து வகுப்பறைகளுக்குமான முதலுதவி பெட்டி, பிரோ, சேர், குடம் என 42 பொருட்களை பள்ளி மாணவர்களுக்காக வழங்கினர். இந்த பள்ளி கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில்100 சத தேர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது. மாணவர்களுக்கு தேவையான பொருட்களை வழங்கிய கிராம மக்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியை நன்றி தெரிவித்தார். மேலும் அரசுப்பள்ளிக்கு வந்த மாணவர்களை பொதுமக்கள் சீர்வரிசையுடன் வரவேற்ற சம்பவம் நெகிழ்ச்சியை உருவாக்கியுள்ளது.