உதகை, டிச. 4- உதகையில் அரசு இ சேவை மையம் முன்பு வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டி யில் குவிந்துகிடக்கும் குப்பைகள் அகற்றப் படாததால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், உதகை வட்டாட் சியர் அலுவலகத்தில் அரசின் இ சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத் தின் அருகில் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டியில், பல மாதங்களாக குப்பை கள் அகற்றப்படாமல் குவித்து வைக்கப்பட் டுள்ளது. இந்நிலையில் தற்போது மழை ஈரத்திற்கு அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீச ஆரம்பித்துள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், இம்மையத்திற்கு வரும் பொதுமக்கள் பல் வேறு நோய் தொற்றுகளுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, இக்குப்பை களை உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.