உதகை, ஜன. 17- நீலகிரி மாவட்டம் குன்னூர் மார்கெட் டில் நடைபாதை யில் உடைந்துள்ள பகுதியை சீரமைக்கப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் மார்கெட் பகுதியில் ராகம் டைலர்ஸ் கடை அருகே பொதுமக்கள் நடை பாதை உடைந்து காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் மார்கெட் பகுதிக்கு வரும் பொது மக்கள் மற்றும் வயதானோர்களுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் நடைபாதையின் கிழே கழிவு நீர் செல்வதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுற்றுப்புறத் தில் கடை வைத்திருப்போர் மற்றும் மார்கெட் பகுதிக்கு வரும் பொதுமக்கள் உள்ளிட்டஅனைவருக்கும் நோய் தாக்குதலுக்கு உள்ளகின்றனர் . எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.