tamilnadu

img

பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்குக, 1 ஆம் தேதியே பென்சன் வழங்கிடுக அரசு போக்குவரத்து ஓய்வுபெற்றோர் நல அமைப்பு எச்சரிக்கை ஆர்ப்பாட்டம்

கோவை, பிப். 18- மாதத்தின் முதல் தேதியி லேயே பென்சன் வழங்க வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை அரசு போக்குவரத்து தலைமை பணிம னையை முற்றுகையிட்டு ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து ஊழி யர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டதால் பரபரப்பு ஏற்பட்டது.  அரசு போக்குவரத்து கழகத் தில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஊழி யர்கள் பல்லாயிரக்கணக்கா னோர் உள்ளனர். இவர்களுக்கு சேர வேண்டிய பணப்பயன்கள் தொடர்ந்து இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. மேலும், மாதத்தின் முதல் தேதியில் வழங்க வேண் டிய ஓய்வூதியம் அந்தந்த கழக நிர்வாகங்களின் இஷ்டப்படி வழங்கப்பட்டு வருகிறது. இதனை  எதிர்த்து கோவையில் செவ்வா யன்று தமிழ்நாடு அரசு போக்குவ ரத்துக் கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பு சார்பில் எச்சரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள அரசு போக்குவரத்து தலைமை பணிமணை முன்பு நடை பெற்ற இப்போராட்டத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போக்குவரத்து ஓய்வூதியர்கள் பங்கேற்றனர். முன்னதாக, இப்போராட்டத்திற்கு சங்கத் தின் தலைவர் ஜி.பழனிச்சாமி தலைமை வகித்தார். இதில், சங்கத் தின் மாநில செயலாளர் சேதுரா மன், பொதுச்செயலாளர் செல்வ ராஜ், ஜீவா நடராஜன், எஸ்டிசி  ஓய்வூதியர் சங்கத்தின் சுரேந்தி ரன் உள்ளிட்டோர் கண்டன உரை யாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத் தில் திரளானோர் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பி னர்.
சேலம்
சேலம் ராமகிருஷ்ணா சாலை யில் உள்ள போக்குவரத்து தலைமை அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு சங்கத்தின் துணைத் தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கி னார். மாநில துணை பொது செய லாளர் எஸ். கே. சம்பந்தம் சிறப்பு ரையாற்றினார். இதில் சங்கத்தின் மண்டல செயலாளர் அன்பழகன் நிர்வாகிகள் ஏ.கே. சந்திரசேகர், குப்புசாமி, மணிமுடி, கந்தசாமி உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற் பட்டோர் பங்கேற்றனர்.