tamilnadu

img

அம்பேத்கர் சிலை உடைப்பை கண்டித்து தடையை மீறி ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஆக. 28 – வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலையை உடைத்த சாதிவெறி யர்கள் மீது சட்டப்படி கடும் நட வடிக்கை எடுக்க வலியுறுத்தி திருப்பூரில் தடையை மீறி ஆர்்ப் பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பெண்கள் உள்ளிட்ட அனைவரையும் காவல் துறை யினர் கைது செய்தனர். வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதைக் கண் டித்தும், இந்த இழிசெயலை செய்த சாதிவெறி பிடித்த குற்றவாளி களைக் கைது செய்து சட்டப்படி தண்டிக்க வலியுறுத்தியும் ஆர்ப் பாட்டம் நடத்த தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தீர்மானித்திருந்தது. ஆனால் இந்த  ஆர்ப்பாட்டத்துக்கு தடை விதித்த மாநகர காவல் துறை, மீறி போராட்டம் நடத்தினால் கைது செய்யப்படும் என்று நிர்வாகி களிடம் தெரிவித்தனர். எனினும் திட்டமிட்டபடி திருப் பூர் அவிநாசி சாலை, அனுப்பர் பாளையம் புதூர், கோவை டிபார்ட் மெண்டல் ஸ்டோர் அருகில் தீண் டாமை ஒழிப்பு முன்னணியைச் சேர்ந்தோர் செவ்வாயன்று மாலை திரண்டனர். அங்கு அம்பேத்கர் சிலை உடைப்பைக் கண்டித்தும், சாதிவெறியர்களைக் கைது செய்ய வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதையடுத்து தடையை மீறி போராட்டம் நடத் தியவர்களைக் காவல் துறையினர் கைது செய்தனர். இப்போராட்டத்துக்குத் தலைமை வகித்த தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலச் செயலாளர் ச.நந்தகோபால், வேலம்பாளையம் நகரச் செயலா ளர் பாபு, மார்க்சிஸ்ட் கட்சியின் வேலம்பாளையம் நகரச் செயலா ளர் வி.பி.சுப்பிரமணியம், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த முத்துக்குமார், திராவிட தமிழர் கட்சி மாவட்டச் செயலா ளர் குணசேகரன், தேசிய சிறுத் தைகள் மாநிலச் செயலாளர் ராதாகிருஷ்ணன், தலித் விடுதலை கட்சி ஆறுமுகம் உள்பட மாதர், வாலிபர், சிஐடியு அமைப்பினர் உள்ளிட்டோரை கைது செய்த னர்.