தருமபுரி, பிப்.26- கடலூர் மாவட்ட ஆட்சியரின் ஊழியர் விரோத, பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்து தருமபுரியில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்ட ஆட்சியர், வருவாய்த் துறை அலுவலர்கள் மீது ஊழியர் விரோத மற்றும் பழிவாங்கும் நடிவடிக்கையை கை விட வேண்டும். நடைமுறைகளை தொடர்ந்து மீறி வரும் மாவட்ட ஆட்சியர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வருவாய்த்துறையின் நீண்டநாள் கோரிக் கையின் மீது வருவாய்த்துறை மற்றும் மேலாண்மைத்துறை அமைச்சர் தலை மையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். தமிழகம்முழுவதும் உள்ள 81 ஆதிதிராவிடர் தனி வட்டாட்சியர் பணியி டங்களை கலைப்பதற்கான நடவடிக் கையை கைவிடவேண்டும் என்பது உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலு வலர் சங்கத்தினர் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.சரவணன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் எஸ்.வெங்க டேசன், மாவட்ட பொருளாளர் அன்பு, மாவட்ட இணை செயலாளர் அருள் பாண்டி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர்.