tamilnadu

img

தொழிலாளர் விவசாயிகள் விரோத கொள்கைகளுக்கு எதிராக பல்லடம், செங்கப்பள்ளியில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பூர், செப். 9 - மத்திய பாரதிய ஜனதா அரசின் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் விரோத கொள்கைகளுக்கு எதிராக திருப்பூர் மாவட்டத்தில் செங்கப்பள்ளி, பல்லடம் ஆகிய இடங்களில் சிஐடியு, விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழி லாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய பாஜக அரசின் ஜனநாயக உரிமை பறிப்பு அடக்குமுறைச் சட்டங் களை கைவிடவும், கார்ப்பரேட் பெரு முதலாளிகளுக்கு ஆதரவாக தொழிற் சங்க சட்டங்களைத் திருத்தம் செய்த தையும், மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை ரத்து செய்ததைக் கண்டித் தும், குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.18 ஆயிரம் வழங்கவும், விவசாய விளை நிலங்களை அழித்து விவசாயிகள் வாழ்வைச் சீரழிக்கும் திட்டங்களை மாற்று வழியில் செயல்படுத்தவும், நூறு நாள் வேலைத் திட்டத்தை 200 நாட்களாக உயர்த்தி நாளொன்றுக்கு ரூ.400 சம்பளம் வழங்கவும், அனைவ ருக்கும் கல்வி, சுகாதாரம், மருத்துவம், வீட்டு வசதி கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. செங்கப்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகில் திங்களன்று நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங் கத்தைச் சேர்ந்த எஸ்.கோபாலகிருஷ் ணன் தலைமை ஏற்றார். சிஐடியு போக் குவரத்து ஊழியர் சங்க நிர்வாகி பன் னீர்செல்வம், சிஐடியு மாவட்டத் துணைச் செயலாளர் ஜெ.கந்தசாமி, விவசாயிகள் சங்க தாலுகா செயலா ளர் எஸ்.கே.கொளந்தசாமி, சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர் வி.கே.பழ னிச்சாமி, விவசாயத் தொழிலாளர் சங்க தாலுகா தலைவர் ஆர்.மணியன், தாலுகா செயலாளர் க.பிரகாஷ் ஆகி யோர் உரையாற்றினர். இதில் திரளா னோர் கலந்து கொண்டனர். பல்லடம் கொசவம்பாளையம் சாலை பிரிவில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ப.கு.சத்தியமுர்த்தி தலைமை வகித்தார். இதில் விவசாயி கள் சங்கத்தின் பல்லடம் ஒன்றிய பொறுப்பாளர் வை.பழனிச்சாமி, விவசாயத் தொழிலாளர் சங்க பொங் கலூர் ஒன்றியச் செயலாளர் ஜி.சுந்த ரம்,  விவசாயிகள் சங்க மாவட்டத் தலை வர் எஸ்.ஆர்.மதுசூதனன்  ஆகியோர் உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத் தில் திரளானோர் கலந்து கொண்ட னர்.