தமிழக அரசை கண்டித்து போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஆவேசம்
கோவை, அக்.18– தமிழக அரசு போக்குவரத்து கழகத்தை தனியார்மயமக்கும் சூழ்ச்சியை மேற்கொள்வதை கண் டித்து கோவையில் அரசு போக்கு வரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் வெள்ளியன்று கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் தற்போதுள்ள பேருந்து வழித்தடங்களை படிப்படியாக தனியார்மயமாக்க முயற்சி செய்து வருகிறது. இதன் முதல்கட்டமாக 525 பேட்டரி பேருந்துகளை இயக்குகிறது. இந்த பேட்டரி பேருந்துகள் கான்ட்ராக்ட் முறை யில் இயக்கப்படும் என்கிற தக வல் வெளிவந்து கொண்டிருக்கிறது. 2 ஆயிரம் புதிய பேருந்துகள் இதே அடிப்படையில் இயக்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இவ் வாறு ஊழியர் நலனுக்கு எதி ராகவும், போக்குவரத்து கழ கத்தை தனியார்மயப்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ள தமிழக அரசை கண்டித்து கோவை யில் அனைத்து அரசு போக்கு வரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் வெள்ளியன்று கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. கோவை - மேட்டுபாளையம் சாலையில் உள்ள அரசு போக்கு வரத்து தலைமை பணிமனை முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப் பாட்டத்திற்கு எல்பிஎப் தொழிற் சங்க தலைவர் பெரியசாமி தலைமை தாங்கினார். இதில் சிஐ டியு சார்பில் பொதுச்செயலாளர் வேளாங்கண்ணிராஜ், ப.காளியப் பன், ஏஐடியுசி சார்பில் சண்முகம், எம்.ஆறுமுகம், எம்எல்எப் விடு தலை ரவி, துரைசாமி, எச்எம்எஸ் ராஜா, ஜெகதீஸ், ஐஎன்டியுசி மதிய ழகன், டிடிஎஸ்எப் சார்பில் கார்த்திக் உள்ளிட்ட தொழிற்சங்க தலைவர்கள் பங்கேற்று கண்டன உரையாற்றினர். மேலும், இந்த ஆர்ப்பாட்டத் தில் போக்குவரத்து கழக வழித் தடங்களில் தனியார் பேருந்துகளை இயக்காதே, மின்சாரப் பேருந்து என்ற பெயரால் போக்குவரத்து கழகங்களை சீர்குலைக்கும் மத்திய அரசின் சதிக்கு துணைபோகாதே, சேவைத்துறையான போக்கு வரத்து துறைக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை, ஈரோடு, திருப்பூர், உதகை உள்ளிட்ட பகுதியில் இருந்து அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.