tamilnadu

img

தூய்மை பணியாளர்கள் நகர்ப்பகுதிலேயே வீடு கேட்டு நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜனிடம் கோரிக்கை

கோவை, ஜூன் 3-கோவை மாநகரில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்களுக்கு நகர்ப்பகுதியிலே வீடு கேட்டு நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜனிடம் மனு கொடுத்தனர்.கோவை மாநகர பகுதியில் துப்புரவு பணியை மேற்கொள்ளும் தொழிலாளர்கள் கோவை சித்தாபுதூரில் அரசு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். சிறிது நாட்களுக்கு முன்பு கீரணத்தம் பகுதி அடுக்கு மாடி குடியிருப்பில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். ஆனால் அக்குடியிருப்பில்எவ்விதஅடிப்படை வசதி இல்லாததுடன், தூய்மைப்பணி மேற்கொள்ளும் தொழிலாளர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் மாநகர் பகுதிகளுக்கு வருவதற்கான போதிய பேருந்து வசதியும் இல்லாதநிலை நீடிக்கிறது. இதனால்உரிய நேரத்திற்குப் பணிக்கு வரமுடியவில்லை. மேலும் குழந்தைகளின் கல்வியும் பாதிப்புக்குள்ளாகிறது.இதனால் மீண்டும் தங்களை கோவை நகர்ப்பகுதியிலேயே குடியமர்த்த வேண்டும் என கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜனிடம் துப்புரவு தொழிலாளர்கள் மனு அளித்தனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையருடன் கலந்துபேசி உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக பி.ஆர்.நடராஜன் தொழிலாளர்களிடம் உறுதியளித்தார். அப்போது சிபிஎம் கோவை மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி உள்ளிட்டோர் உடன் இருந்தார்.