tamilnadu

விசைத்தறி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்குக! தமிழக அரசுக்கு கோரிக்கை

கோவை, ஜூன் 10- விசைத்தறி தொழிலாளர்களுக்கு ஒப்பந்த காலம் முடிந்து புதிய கூலி உயர்வு வழங்க தமிழக அரசு தலையிட வேண்டும் என விசைத்தறி தொழிலாளர் சம்மேளன மாநிலக்குழு வலியுறுத்தியுள்ளது.  தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளர் சம்மேளன மாநிலக்குழு கூட்டம் கருமத்தம்  பட்டியில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் பி.முத்துசாமி தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் எம்.சந்திரன், பொருளாளர் எம்.அசோகன் உள்ளிட்ட மாநிலக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.  கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார்  2 லட்சம் விசைத்தறி தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். ஜவுளி உற்பத்தியாளர் கள் ஏற்கனவே ஒப்புக்கொண்ட கூலியை குறைத்ததால் இத்தொழிலாளர்கள் பெரும்  சிரமத்தை சந்தித்து வருகின்றனர். தங்களின்  வருமான பற்றாக்குறையால் வட்டிக்கு கடன்  வாங்கி வாழ்க்கையை நகர்த்தி வருகின்ற னர்.  இந்நிலையில் ஒப்பந்த காலம் முடிவ டைந்து புதிய கூலி உயர்வு வழங்க வேண்டும்.  இப்பிரச்சனையில் மாநில அரசு உடனடி யாகத் தலையிட்டு புதிய கூலி உயர்வு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், இனிவரும் காலங்களில் ஜவுளி  உற்பத்தியாளர்கள், விசைத் தறி உற்பத்தி யாளர்கள், கூலி உயர்வு உடன்பாட்டை முத்த ரப்பு ஒப்பந்தமாக பதிவு செய்ய வேண்டும்.  இப் பேச்சுவார்த்தைக்குத் தொழிற்சங்கங்க ளையும் அழைக்க வேண்டும். இதேபோல  விசைத்தறியாளர்களின் நீண்டநாள் கோரிக் கையாக உள்ள ஜவுளி சந்தையை ஏற்படுத்தி, விசைத்தறி உரிமையாளர்களையும், தொழிலாளர்களையும் பாதுகாக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். எவ்வித சட்ட சமூக பாதுகாப்புமற்ற இத்தொழி லாளர்களை பாதுகாக்கவும், எட்டு மணி நேர  வேலை, குறைந்தபட்ச ஊதியம் ரூ.18ஆயி ரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை கள் மாநிலக்குழு கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.  மேலும், இத்தீர்மானத்தை வலியுறுத்தி  அரசின் கவனத்தை ஈர்க்க ஆகஸ்டு மாதம்  தமிழகம் முழுவதும் தொழிலாளர்களைத் திரட்டி போராட்டம் நடத்துவது என  மாநிலக்குழு கூட்டத்தில் முடிவெடுக் கப்பட்டது.