அன்று
பஞ்சாயத்து தேர்தல்கள் நடத்தாத மாநிலங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் பி.ஆர்.நடராஜன் எழுப்பிய கேள்வி: பஞ்சாயத்து தேர்தல்கள் நடத்தாத மாநிலங்களுக்கு மத்திய நிதி உதவி நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறதா? அதன் விவரங்கள் என்ன?மத்திய பஞ்சாயத்துராஜ் அமைச்சர் பி.கிஷோர் சந்திர தியோ அளித்த பதில்:மாநில அரசுகள் தங்கள் மாநிலங்களில் பஞ்சாயத்து தேர்தல் நடத்தாதபோது, அந்த மாநிலங்களுக்கு மத்திய அரசால் பல்வேறு திட்டங்களுக்காக வழங்கப்படும் நிதி உதவிகளை நிறுத்திவைக்க முடியும். உதாரணமாக மத்திய நிதி ஆணையத்தின் (ருniடிய கiயேnஉந உடிஅஅளைiடிn) மானியம் ஆந்திர பிரதேசத்தில் பஞ்சாயத்துதேர்தல் நடத்தாததால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் அரசியல் அமைப்பு சட்டத்தின்படி ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்.
இன்று
தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் குறிப்பிட்ட காலத்திற்குள் நடத்தப்படாததால், நடப்பாண்டில் மத்திய அரசிடமிருந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு கிடைக்க வேண்டிய நிதியில் ரூ.1,950 கோடி முடக்கி வைக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய நிதியைக் கூட செயலற்ற தன்மையால், தமிழக அரசு இழந்திருப்பது கண்டிக்கத்தக்கது. -பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை மார்ச் 23,2018