சேலம், ஏப். 29-10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் திங்களன்று வெளியிடப்பட்டது. இதில் சேலம், நீலகிரி, கோவை,ஈரோடு, நாமக்கல், தருமபுரி மாவட்ட தேர்ச்சி விகிதம் வருமாறு,சேலம் மாவட்டத்தில் 22,112 மாணவிகள், 22221மாணவர்கள் என மொத்தம் 44, 333 பேர் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர். இதில் 21,432 மாணவிகள், 20,904 மாணவர்கள் என மொத்தம் 42,336 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 95.5 சதவிகிதம் ஆகும். மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் பங்கு பெற்ற பள்ளிகள் 532. இதில் 236பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவிகள் 100 சதவிகிதம் தேர்ச்சியடைந்துள்ளனர். இதில் 254 அரசு பள்ளிகளில் 100 தேர்ச்சியடைந்த அரசு பள்ளிகள் 70 ஆகும். 29 நிதி உதவி பெறும் பள்ளிகளில் 9 பள்ளிகளின்மாணவர்கள் 100 சதவிகிதம் தேர்ச்சியடைந்துள்ளனர். மாற்றுத்திறனாளி மாணவர்கள் 207 பேர்தேர்வெழுதினர். இதில் 191 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நீலகிரி
நீலகிரி மாவட்டத்தில் 7,957 மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினர். இதில் 7,660 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். அரசு பள்ளியில் பயின்ற 2,755 மாணவ, மாணவிகளில் 2,538 பேரும், தனியார் பள்ளியைச் சேர்ந்த 5,202 பேர் 5,122 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 96.27 சதவிகிதம் ஆகும்.
கோவை
கோவை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 96.44 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டு 95.86 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கோவை மாவட்டத்தில் 20,049 மாணவர்கள், 20,144 மாணவிகள் என மொத்தம் 40,193 பேர் தேர்வு எழுதினர்.அவர்களில் 38,762 பேர் தேர்ச்சி பெற்றனர். மாற்றுத்திறனாளிகள் 194 பேர் (94.17) தேர்ச்சியடைந்துள்ளனர். பொள்ளாச்சியில் 95.61 சதவீதமும், கோவை 94.52 சதவீதமும், பேரூர் 96.10 சதவீதமும், எஸ்.எஸ்.
குளத்தில் 97.30 சதவீதமும் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாநகராட்சி
கோவை மாநகராட்சி பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 92.14 சதவிகிதம் தேர்ச்சி. கடந்த ஆண்டினை விட 2.51 தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.
2018-2019 கல்வியாண்டு பத்தாம் வகுப்பு பொதுதேர்வில் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 26 பள்ளிகளை சேர்ந்த 1,831 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 1,195 மாணவிகள், 636 மாணவர்கள். தேர்வு எழுதிய 1,195 மாணவிகளில் 1,151 பேரும்,636 மாணவர்களில் 536 பேரும் தேர்ச்சி பெற்றனர். மொத்தம் 1,687 மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி
பெற்றனர். இதில் மாணவிகள் 96.32 சதவிகிதமும், மாணவர்கள் 84.28 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி விகிதம் 92.14 சதவிகிதம்.
கடந்த ஆண்டினை காட்டிலும் 2.51 சதவிகிதம் அதிகமாகும். 26 பள்ளிகளில் 5 பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சியடைந்துள்ளது
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் 165 அரசுப்பள்ளிகள், 9 நகரவை பள்ளிகள், 27 நிதி உதவி பெறும் பள்ளிகள், 38 சுயநிதி பள்ளிகள், 4 நலத்துறை பள்ளிகள், 115 மெட்ரிக் பள்ளிகள் என 358 பள்ளிகளில் ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றது. இதில் 12 ஆயிரத்து 693 மாணவர்களும், 12 ஆயிரத்து 657 மாணவிகள் என 25 ஆயிரத்து 350 பேர் தேர்வெழுதினர். இதில் 12 ஆயிரத்து 406 மாணவர்கள், 12 ஆயிரத்து 541 மாணவிகள் என 24 ஆயிரத்து 947 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
மாவட்டத்தில் மாணவர்கள் 97.74 சதவிகிதமும், மாணவிகள் 99.08 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாநில அளவிலான தேர்ச்சி பட்டியலில் ஈரோடு
மாவட்டம் நான்காம் இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு 99.38 சதவிகிதம் தேர்ச்சி அடைந்த நிலையில்,
இந்த ஆண்டில் 0.97 சதவிகிதம் குறைந்து 98.41 சதவிகிதம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.அரசுப் பள்ளிகள் 165 ல் 102 பள்ளிகளும், நகரவைப் பள்ளிகள் 9ல் 5 பள்ளிகளும், நிதி உதவி பெறும்பள்ளிகள் 27 ல் 17 பள்ளிகளும், 38 சுயநிதி பள்ளிகளில் 26 பள்ளிகளும், 115 மெட்ரிக் பள்ளிகளில் 100 பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சி அடைந்துள்ளது. மாநில
அளவில் அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவிகிதத்தில் 97.64 சதவிகிதம் பெற்றுள்ளது.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் 309 அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 11,280 மாணவர்கள், 10,192 மாணவிகள் ஆக மொத்தம் 21,472 மாணவ,
மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் மாணவர்கள் 11,053 பேரும், மாணவிகள் 10,086 பேரும் என 21,139 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டத்தில் சராசரி தேர்ச்சி விகிதம் 98.45 ஆகும். கடந்த ஆண்டை விட 3.37 விழுக்காடு கூடுதலாகும். மாநில அளவில் கடந்த ஆண்டு 19 ஆம் ஆண்டிலிருந்து இந்த ஆண்டு 3 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
மாவட்டத்தில் உள்ள 147 அரசு பள்ளிகளைச் சார்ந்த 10,358 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 10,113 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். இதில் 78 அரசு பள்ளிகள் 100 சதவிகித தேர்ச்சியடைந்துள்ளன.
தருமபுரி
தருமபுரி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியவர்கள் 96 சதவிகிதம் தேர்ச்சியடைந்துள்ளனர். இதில் மாணவர்களை விட மாணவிகளே அதிக அள
வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டத்தில் 322 அரசு,தனியார் மற்றும்உதவி பெறும் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் 11,137 மாணவர்களும்,10,489 மாணவிகளும் என மொத்தம் 21 ,626 பேர் தேர்வு எழுதினர். இதில் 10 ஆயிரத்து 593 மாணவர்களும், 10 ஆயிரத்து 567 மாணவிகளும் என மொத்தம் 20 ஆயிரத்து 760 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
213 அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 94.53சதவிகிதம் ஆகும். அரசு பள்ளிகளில் மாநில அளவில் தருமபுரி மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் 13 வது இடத்தைபிடித்துள்ளது. கடந்த ஆண்டில் 16வது இடத்தில் இருந்து 13 வது இடத்திற்கு தருமபுரி முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.