tamilnadu

img

ஒரு லட்சம் பஞ்சாலைத் தொழிலாளர்கள் தவிப்பு

கொரோனா கால ஊதியம் வழங்க தொழிற்சங்கங்கள் கோரிக்கை

திருப்பூர், மே 15 – திருப்பூரில் கொரோனா ஊர டங்கு காரணமாக வறுமையில் கடும் நெருக்கடியை சந்தித்து வரும் ஒரு லட்சம் பஞ்சாலைத் தொழிலாளர்களுக்கு கொரோனா கால ஊதியம் வழங்க ஏற்பாடு செய்யுமாறு அனைத்து பஞ்சா லைத் தொழிலாளர் சங்கத்தினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரி சிஐடியு மாவட்டப் பொதுச் செயலாளர் சி. ஈஸ்வரமூர்த்தி, ஏஐடியுசி மாவட்டப் பொதுச் செயலாளர் வி. சௌந்தரராஜன், ஐஎன்டியுசி தலைவர் கோ. சீனி வாசன், எம்எல்எப் செயலாளர் ப. ஈஸ்வரன், எல்பிஎப் செயலாளர் கே. நாகமாணிக்கம், பிஎம்எஸ் பொறுப்பாளர் எம். நாகராஜ் ஆகி யோர் கையெழுத்திட்ட மனு வியாழனன்று ஆட்சியரிடம் அளிக் கப்பட்டது. இதில் கூறியிருப்ப தாவது,  உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், காங்கேயம், அவிநாசி, பல்லடம் உள்பட திருப்பூர் மாவட் டத்தில் 300 -க்கும் மேற்பட்ட பஞ் சாலைகளில் வேலை செய்யும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கொரோனா ஊர டங்கு காரணமாக கடும் வறுமை யில் சிக்கித் தவித்து வருகின்றனர்.

இவர்கள் கடந்த 45 நாட்களுக்கு மேலாக எந்த வருமானமும் இல்லாமல் சிரமப்படுகின்றனர்.  அத்தொழிலாளர்கள் வேலை செய்யும் ஆலைகள் கொரோனா காலத்திற்கு ஊதியம் வழங்க வேண்டும் என பிரதமரும், முதல் வரும் உத்தரவிட்டனர். ஆனால், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எந்தவொரு பஞ்சாலை நிர்வாகமும் தொழிலாளர்களுக்கு இதுவரை  ஊதியம் வழங்கவில்லை. எனவே தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா ஊரடங்கு முடியும் போது அனைத்து தொழி லாளர்களுக்கும் ஊரடங்கு கால முழுச் சம்பளம் வழங்க வேண்டும் என அரசு கூறியுள்ளது. எனவே மாவட்ட ஆட்சியர் தலையிட்டு பஞ்சாலை நிர்வாகங்கள் அனைத்து தொழிலாளர்களுக்கும் கொரோனா கால ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.