தில்லி திகார் சிறையில் விசாரணை சிறைவாசியாக இருந்தார் ஷபீர் என்கிற நபீர். இஸ்லாமியரான இவர் குற்றவழக்கு ஒன்றில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் சிறையிலிருந்து வருகிறவர். ஒருநாள் சமையல் பணியின்போது , இன்டெக்சன் அடுப்பு வேலை செய்யவில்லையென்று, சிறைக் கண்காணிப்பாளர் ராஜேஷ் சவுகானிடம் புகார் தெரிவித்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த ராஜேஷ் சவுகான், கம்பியைப் பழுக்கக் காய்ச்சி, நபீரின் முதுகில் ‘ஓம் ‘ என்கிற தேவநாகிரி இந்து மத அடையாள எழுத்தை ॐ எழுதியுள்ளார். இக்கொடுமையை தன்னைப் பார்க்க வந்த பெற்றோரிடம் தெரிவிக்க, அவர்கள் நீதிமன்றத்தில் முறையிட, நீதிபதி நபீருக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதுடன் சிறை கண்காணிப்பாளர் ராஜேஷ் சவுகானை உடனடி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
ஓம் என்பது எம்மொழிச்சொல், அதன் பொருள் என்ன?
மின்துறையில் மின்தடையின் அலகாக ஓம் குறிக்கப்படுகிறது. இந்த விதியை வரை
யறுத்தவர் ஜார்ஜ் சைமன் ஓம் என்கிற ஜெர்மன் விஞ்ஞானி.
ஓம் - பிரணவ மந்திரம் என்கிறது புராணக் கதை. இந்த மந்திரத்தை படைத்தல் தொழிற்கட
வுள் பிரம்மன் மறந்துவிட்டதால் பிரம்மனை தமிழ்க்கடவுளான முருகன் சிறையில் அடைத்தான் என்கிறது கந்தன்புராணம்.
ஓம் - ॐ; ओं; ௐ, 卍 என பல எழுத்துருக்களால் குறிக்கப்படுகிறது. இது தவிரவும் உருது,
அரபி, மாண்டரின் மொழிகளில் இச்சொல் உண்டு.
ஓம் என்கிற ஒலியின் முதல் எழுத்துரு 卍. சிந்து சமவெளி (கிமு3000 - 2500)
காலத்திற்கு முற்பட்ட தமிழ் கிரந்த எழுத்துரு இது. இதே எழுத்து சீன மான்டரின்
மொழியில் ஓன் என்பதாக இருக்கிறது. கனடா நாட்டின் அஞ்சல்துறை இலட்சினையாக
வும் இந்தியாவின் தேர்தல் இலட்சனை, ஜெர்மனியில் நாசிச இலட்சனையாகவும் இருந்து
வருகிறது. இன்று இது , ஸ்வாஸ்டிக் (Swastik) என அழைக்கப்படுகிறது.
இவ்வெழுத்து சிந்துவெளி, ஹரப்பா மற்றும் மொகஞ்சதாராவிலும், எகிப்து மற்றும் சுமேரிய எழுத்து வடிவத்திலும் மேலும் சீன வரிவடிவத்திலும் காணப்படுகிறது. இந்தக்குறி
யீட்டின் மூலம் தென்னகம் என்கிறார் பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார்.
சிந்துவெளி மொழி விளக்கமடையாநிலையில் உள்ளது. எனினும், அதன் எழுத்துக்கள்
தமிழிலுள்ள 31 எழுத்துக்களே என்றும், அதில் 12 உயிர், 18 மெய் என்றும் இதில் முதன்மை
யான எழுத்து 卍 என்றும் சொல்கிறார் திருத்தந்தை ஹீராஸ் பாதிரியார்.
இந்தியாவில் அதர்வண வேதக் காலத்தில் (கிமு 500- 400) மாண்டூக்யம் உபநிடதம் தோன்றியது. இதில்தான் முதன்முதலில் ஓம் ॐ என்கிற சொல் இடம் பெற்றது. இதன் ஆங்கில வடிவம் welcome to the lord.
‘ஓம் எனும் ஓங்காரம்’ என்கிறது திருமந்திரம்.
தேவநாகிரி ॐ ஓம் என்பது ஆண் - பெண் புணர்ச்சியின் ஆபாசக் குறியீடு என்கிறது -
விடுதலை பத்திரிகை.
卍 ஓம் இவ்வோசை மெல்லப் பரவி இயேசு பேசிய மொழியான எபிரேயம் மொழியில்
ஆமென் என்றாகியது.மேலும் இது அரபி மொழியில் ஓமென் என்றானது.
1741 ஆம் ஆண்டு துருக்கிய ஏகாதிபத்தியத்திலிருந்து பெரும்வாரியான மக்கள் தனியாக
பிரிந்துப்போக சம்மதம் தெரிவித்தார்கள். அதன்படி புதிதாக ஒரு நாடு உதயமானது. அந்நாடு, ஓமன். ஓமன் என்பதற்கு சம்மதப்பகுதி என பொருள். இணையதள முகவரியில்
.com என்பது உலகப் பொதுவானவை; .in (.இன்) என்றால் இந்தியா போன்று .om (.ஓம்)
என்பது ஓமன் நாட்டு இணையக் குறியீடாகும்.
கணினி யுனிகோடில் ஓம் என்கிற சொல் (U+0BD0) என்கிற குறியீடாக உள்ளீடு செய்யப்பட்டுள்ளது.
பேராசிரியர் வித்துவான் பாலூர்கண்ணப்ப முதலியார் தொகுத்த தமிழ் இலக்கிய அகராதி ஓம் என்பதற்கு பிரணவம், ஆம் என விளக்கம் தந்துள்ளது.
ஜெயசிறீயின் வடமொழி தமிழ் அகராதி, ஓம் என்பதற்கு ஆமெனும் உடன்பாட்டை உணர்த்தும் ஓர் இடைச்சொல்; தன்மைப் பன்மை விகுதி; பிரணவம் என்கிறது.
ஓம் - தன்மைப்பன்மைவிகுதி (நன்னூல்)
ஓமோமெனவோங்கியதோர்சொல் - திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம்
‘ஓம்படை யொன்றுஞ் செப்பாள்’ சீவகசிந்தாமணி. ஓம்படை என்பது அரசனை புலவன் வழிநடத்துவதாகும்.
ஓம் எனும் எழுத்து அதனின் உள் உயிர்/ஆம் அவன் அறிவினுக்கு ஆறிவும் ஆயினான்
(இரணிய வதைப்படலம் - கம்பராமாயணம்). இங்கு ஓம் என்பது அஉம் - பிரணவ மந்திரம்.
ஆம் என்கிற சொல்லின் திரிபே ஓம் என்கிறார் மொழிஞாயிறு தேவநேயப்பாவாணார். இச்சொல் ஈழம், தென்னாப்பிரிக்க தமிழர்களால் ஓம் என்றே இன்றும் விளிக்கப்படுகிறது . ஓம் என்பது பலர்பால் வினைமுற்று விகுதி. ஒன்றுபடுவோம், போராடுவோம், வெற்றிபெறுவோம்’ போராட்டக்குரல்கள் ‘ஓம்’ எனும் விகுதிப்பெற்றே முடிகிறது.
வடமொழியில் இச்சொல் ‘அம்’ என்றும் தேவநாகிரி இந்தியில் ‘ஓம்’ என்றும் விளிக்கப்பட்டாலும் அம், ஆம், ஒம், ஓம், ஒன், ஓன் என்பதன் ஆதி ஒலிப்பு ஓம் 卍 என்பது தமிழின் கொடை.