சிஐடியு தனியார் பாதுகாவலர்கள் சங்கம் வலியுறுத்தல்
கோவை, ஆக.16– கூடுதல்நேரே பணிக்கு (ஓவர்டைம்) இரட்டிப்பு ஊதியம் வழங்க வேண் டும் என தனியார் பாது காவலர் மாநாடு வலியு றுத்தியுள்ளது. சிஐடியு கோவை மாவட்ட தனியார் பாது காவலர்கள் (செக்யூரிட்டி) சங்கத்தின் 3ஆவது மாவட்ட மாநாடு கோவை காட்டூர் மில் தொழிலாளர் சங்க கூட்டரங்கில் சங்க தலைவர் ஆர்.வேலுசாமி தலைமையில் வியாழ னன்று நடைபெற்றது. மாவட்ட துணை செய லாளர் ஏ.மணி வரவேற்பு ரையாற்றினார். மாநாட் டை துவக்கிவைத்த சிஐடியு கோவை மாவட்ட செய லாளர் எஸ்.கிருஷ்ண மூர்த்தி உரையாற்றினார். மாநாட்டை வாழ்த்தி சாலை போக்குவரத்து சம்மேளன பொதுச்செயலாளர் எஸ்.மூர்த்தி உள்ளிட்டோர் உரையாற்றினர். சங்கத் தின் பொதுச்செயலாளர் என்.செல்வராஜ், பொரு ளாளர் பி.விஜயபாஸ்கர் ஆகியோர் அறிக்கையை முன்வைத்து பேசினர். முன்னதாக, இம் மாநாட்டில் பணியின் போது சமூக விரோதிகளால் தாக்கப்பட்டு பாதுகாவ லர்களுக்கு மரணம் ஏற் பட்டால் ரூ.7 லட்சம் நிவா ரணத்தை பணிபுரியும் நிறு வனம் வழங்க வேண்டும். மழை, குளிர் காலங்களில் தொழிலாளிக்கு பாது காப்பு உடை வழங்க வேண்டும். பணி செய்யும் இடங்களில் இயற்கை உபாதைகளுக்கு கழிப்பிட வசதி செய்து கொடுக்க வேண்டும். 8 மணிநேர வேலை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப் பட்டது. இதனையடுத்து சங்கத் தின் புதிய தலைவராக எம். பரமேஸ்வரன், பொதுச் செயலாளராக என்.செல்வ ராஜ், பொருளாளராக பி. விஜயபாஸ்கர் மற்றும் 12 பேர் கொண்ட புதிய நிர் வாகக்குழு தேர்வு செய்யப் பட்டனர். மாநாட்டை நிறைவு செய்து சிஐடியு மாவட்ட நிர்வாகி ப.காளியப்பன் உரையாற்றினார். இதில் ஏரளாமான தனியார் பாது காவலர்கள் பிரதிநிதிகளாக மாநாட்டில் பங்கேற்றனர். முடிவில் டி.சீனிவாசன் நன்றி கூறினார்.