தருமபுரி, செப். 10- அருந்ததியர் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட இடம் ஆக்கிரமிக் கப்பட்டதை மீட்டுதரக்கோரி தரும புரி அருகே பொதுமக்கள் குடியே றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி ஒன்றியத்திற்குட்பட்ட ஆட்டுக்காரம்பட்டி கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட அருந்ததியர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் அன்றாடம் கூலிவேலை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இம்மக்க ளுக்கு கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு 3 ஏக்கர் நிலம் அரசு வழங்கி யது. இந்நிலையில், இந்த இடத்தை தனிநபர் பல ஆண்டு காலமாக ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் இம்மக்களில் பலர் வீடு இல்லாமல் சிரமத்திற்குள்ளாகி வந்தனர். இது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகா ரிகளுக்கு அப்பகுதியினர் பலமுறை மனு அளித்தனர். ஆனால், அதி காரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், அரசால் ஒதுக் கப்பட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட் டுள்ள இடத்தை மீட்டுத்தரக் கோரி யும், அவ்விடத்தில் வீடு இல்லாத வர்களுக்கு மனை பட்டா வழங்கக் கோரியும் ஆட்டுக்காரம்பட்டி அருந்ததியர் மக்கள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தருமபுரி சார் ஆட்சி யர் சிவன் அருள் அம்மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இரண்டு மாதத்திற்குள் அந்த இடத்தை மீட்டு வீடு இல்லாத வர்களுக்கு வழங்குவதாக உறுதிய ளித்தார். இதனையடுத்து பொதுமக் கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.