tamilnadu

இலவச வீட்டுமனை இடம் ஆக்கிரமிப்பு  நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்சியரிடம் மனு

 ஈரோடு, செப். 23- அரசு சார்பில் வழங்கப்பட்ட இலவச வீட்டு மனையை ஆக்கிரமித்துள்ள நபர்கள் மீது நடவ டிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொது மக்கள் மனு அளித்தனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் குமரன் நகர் பகுதிலுள்ள மக்களுக்கு அரசு சார்பில் 69  இலவச வீட்டுமனை வழங்கப்பட்டுள்ளது. இதை யடுத்து அப்பகுதியில் வீடு கட்ட பொதுமக்கள் முடிவுசெய்து, பணிகளை துவக்கியுள்ளனர். இந் நிலையில் அவர்களை வீடு கட்ட விடாமல் சிலர் தடுத்து வருவதுடன், தங்களுக்கு பட்டா வழங்கிய இடத்தை ஆக்கிரமிப்பும் செய்துள்ளனர். எனவே, ஆக்கிரமிப்பினை அகற்றி எங்களுக்கு வழங்கப்பட்ட இடத்தை அளந்து கொடுக்க வேண்டும் என வலி யுறுத்தி திங்களன்று மாவட்ட ஆட்சியர் சி.கதிரவ னிடம் அப்பகுதி மக்கள் மனு அளித்தனர்.