tamilnadu

காலமுறை ஊதியம் கோரி சத்துணவு ஊழியர் சங்கத்தினர் மறியல்

தருமபுரி, நவ.26- காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு சத் துணவு ஊழியர் சங்கத்தினர் செவ்வாயன்று தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியல் போராட் டத்தில் நடைபெற்றது.  மறியல் போராட்டத்திற்கு மாவட்டத்தலைவர் சி.எம். நெடுஞ்செழியன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் ஜி.பழனியம்மாள் மறியலை துவக்கி வைத்தார்.   தமிழக அரசு சத்துணவு திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு துவக்கத்தில் மதிப்பூதியம்,தொகுப்பூதியம் வழங்கப்பட்டது. தற்போது சிறப்பு காலமுறை ஊதியம்  வழங்கப்பட்டு வருகிறது. 36-ஆண்டுகளாக செயல் படுத்தும்  சத்துணவு திட்டத்தில் பணிபுரியும் ஊழியர் களுக்கு காலமுறை ஊதியம் வழங்கவேண்டும். பாதுகாப் புடன் கூடிய ஓய்வூதியமாக ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும்.  உணவு மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். வயது முதிர்வின் காரண மாக பணி ஓய்வுபெறும் சத்துணவு ஊழியர்களுக்கு பணிக் கொடையாக ரூ.10 லட்சமும், சமையலர் உதவியாளர் களுக்கு ரூ.5 லட்சம் வழங்கவேண்டும். 25 குழந்தைகளுக்கு குறைவாக உள்ள பள்ளி சத்துணவு மையங்கள் மூடுவதை கைவிடவேண்டும். முறைகேட்டை தவிர்க்கும் பொருட்டு நியாயமான முறையில் கவுன்சிலிங் மூலம் பணியிட மாறுதல் வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் நடைபெற்றது. மறியலில் 250க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.  முன்னதாக, மாவட்டச் செயலாளர் சி.காவேரி மாவட்ட பொருளாளர் கே.தேவகி, மாவட்ட நிர்வாகிகள் பி.வளர்மதி பி.மகேஸ்வரி, பி.அனுசுயா, பி.தேவேந்திரன், டி.சுகுமார், வி.கணேசன், வி.வளர்மதி,எஸ்.லூசாமேரி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் எம்.சுருளி நாதன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். 

சேலம்

 சத்துணவு ஊழியர்களுக்கு முறையான கால முறை ஊதியம் வழங்கிட வலியுறுத்தி சத்துணவு ஊழியர் சங்கத் தினர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியல்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.  சங்கத்தின் மாவட்ட தலைவர் கே.தங்கவேலன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராஜவேலு, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநில துணைத் தலைவர் என்.திருவேரங்கன், மாநில செயற்குழு உறுப் பினர் அமராவதி, அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சி. முருக பெருமாள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண் டனர்.

நாமக்கல்

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு, மாவட்ட தலைவர் தங்கராஜூ தலைமை வகித்தார். இதில் திரளான சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.