tamilnadu

img

அண்ணாமலைப் பல்கலையில் புதிய படிப்புகள்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அனைத்துத் துறைகளிலும் புதிய படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதேபோன்று, சில புதிய பாடத் திட்டங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதன் சிறப்பு என்னவென்றால், மாணவர்களே விருப்பப் பாடத்தை தேர்வு செய்துகொள்ளலாம். படிக்கும்போது மேலும் இரு மதிப்புக் கூட்டக்கூடிய (ஏயடரந ஹனன ஊடிரசளநள) படிப்புகளை படிக்கலாம்.பல்கலைக்கழகத்தில் 2019-20-ஆம் கல்வியாண்டில் அனுமதி சேர்க்கையை அதிகரிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆன்-லைன் கவுன்சிலிங்கில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அடுத்ததாக அண்ணாமலைப் பல்கலைக்கழகம் பட்டியலில் சேர்க்கப்படவுள்ளது. 

பொறியியல் புலத்தில் புதிய பட்டப் படிப்புகளாக பி,இ., சி.எஸ்.இ. பிக் டேட்டா அனலிடிக்ஸ் (B.E., CSE Big Data Analytics), பி.இ., சி.எஸ்.இ., ஏ.எல். அண்டு மெஷின் லேர்னிங் (B.E., CSE (AL And Machine learning) படிப்புகள் தொடங்கப்பட உள்ளன. இந்த இரு படிப்புகளிலும் 60 பேர் அனுமதி சேர்க்கை செய்யப்படுவார்கள். இவையல்லாமல், இந்த ஆண்டு புதிய படிப்புகளாக எம்.எஸ்சி., டேட்டா சயின்ஸ் (M.sc., Data Science)- 30 இடங்கள், எம்.பி.ஏ., பிசினஸ் அனலிடிக்ஸ் (MBA Business Analytics)- 60 இடங்கள், எம்.பி.ஏ., இன்பராஸ்ட்ரக்சர் மேனேஜ்மென்ட் (MBA Infrastructure Management)- 50 இடங்கள், எம்.காம்., பிசினஸ் இன்டலிஜன்ஸ் (M.Com., Business Intelligence) - 30 இடங்கள், நெய்வேலி நிலக்கரி நிறுவன ஊழியர்களுக்கான எக்ஸிகியூட்டிவ் எம்.பி.ஏ., (Executive MBA) (2 ஆண்டு) படிப்பு - 50 இடங்கள், முதுநிலை பட்டய படிப்பான டிப்ளமோ இன் பிசினஸ் அனலிடிக்ஸ் - பிசினஸ் இன்டலிஜென்ஸ் (PG Diploma In Business Analytics and Business Intelligence)-20 இடங்கள், டிப்ளமோ இன் இ-காமர்ஸ் - மேனேஜ்மென்ட் (Diploma in E-Commerce and Management)- 60 இடங்கள், டிப்ளமோ இன் மேனேஜ்மென்ட் - 60 இடங்கள், பி.வோக். மெக்ட்டிரானிக்ஸ் (B.Voc.Mechetronics)- 60 இடங்கள், பி.வோக். லாஜிஸ்டிக்ஸ் (B.Voc.Logistics)- 60 இடங்களுக்கும் அனுமதி சேர்க்கை வழங்கப்படுகிறது.

மேலும் வேளாண் துறையில் பட்டய (Diploma in Agriculture) படிப்புக்கான அனுமதி சேர்க்கை எண்ணிக்கை 100-லிருந்து 200-ஆகவும், தோட்டக்கலை (Diploma in Horticulture) படிப்புக்கான அனுமதி சேர்க்கை 50-லிருந்து 100-ஆகவும் உயர்த்தப்படுகிறது.

அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி மையத்தில் 2018-19-ஆம் கல்வி ஆண்டில் 92 ஆயிரம் பேர் பயின்று வருகின்றனர்.

இதில், வருகிற கல்வி ஆண்டில் ஒரு லட்சத்து 5 ஆயிரம் பேர் வரை அனுமதி சேர்க்கை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

பிளஸ் 2 முடித்த மாணவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொத்தம் 72 படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த கல்வியாண்டு முதல் பொறியியல் படிப்பில் சேர வொக்கேஷனல் பிரிவில் பயின்ற மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.