திருப்பூர் காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
அவிநாசி, ஆக். 21- திருப்பூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஞானசேகர் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்திய காவல் துறையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் சார்பில் திருப்பூர் குமரன் சிலை முன்பு ஆவேசமிகு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. திருப்பூர் மாநகராட்சிக்குட் பட்ட கே.வி.ஆர் நகர் பகுதியில் தனியார் நகை அடமான கடை அமைந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக நகை அடமான கடை திறக்கப்படாமல் பூட்டியே கிடந்துள்ளது. இதனால் அக்கடையில் நகைகளை அடமா னம் வைத்திருந்த அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அதிர்ச்சி யடைந்தனர். இதைத்தொடர்ந்து ஞாயிறன்று தாங்கள் அடமானம் வைத்த நகைகளை மீட்டு தரக் கோரி பூட்டிய அடகு கடை முன்பு அமர்ந்து தன்னெழுச்சியாக மறி யல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள னர். இதையறிந்த காவல்துறை யினர் பொதுமக்கள் மத்தியில் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்பின்னர் வட்டாட்சியர் முன்னிலையில் காவல்துறையி னர் கடையினை திறந்துள்ளனர். இதையடுத்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஒரே நேரத்தில் திரண்டதால் காவல்துறையினர் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியா மல் திணறினர். இதைக்கண்ட அப்பகுதியைச் சேர்ந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஞானசேகர், பொதுமக்களை வரிசைப்படுத்தி நிற்க வைத்துள்ளார்.
இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத உதவி காவல் ஆய்வாளர் முத்துக்குமார், ஞானசேகரை அங்கிருந்து கீழே தள்ளிவிட்டுள் ளார். இதையடுத்து எதற்காக தள்ளிவிடுகிறீர்கள், பொதுமக்க ளுக்கு உதவி செய்தது தவறா என ஞான சேகரன் கேட்டதால் ஆத்திரமடைந்த காவல் உதவி ஆய்வாளர் முத்துக்குமார், அங்கி ருந்த காவலர்கள் துணையுடன் ஞானசேகரை நகைக்கடைக் குள்ளே தள்ளி கதவை சாத்திவிட்டு கொலைவெறித் தாக்குதல் நடத் தியுள்ளனர். இதன்பின்னர் ஞானசேக ரனை காவல்நிலையத்திற்கு இழுத்துச் சென்று பிளாஸ்டிக் பைப்பை கொண்டு கை, கால், முகம் என அனைத்து இடங்களி லும் கொடூரமாக தாக்கியுள்ளார். இதன்பின்னர் வாலிபர் சங்கத்தி னர் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்கள் காவல் நிலையம் சென்று அவரை மீட்டனர். அதே நேரம், காவல்துறையினரின் கொடூர தாக்குதலில் படுகாய மடைந்த ஞானசேகர், அருகி லுள்ள தனியார் மருத்துவம னைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திருப்பூர் காவல்துறையினரின் இந்த கொடூரத் தாக்குதல் நடவ டிக்கையை கண்டித்தும், தாக்கு தல் நடத்திய உதவி காவல் ஆய்வா ளர் முத்துக்குமார் மீது துறை ரீதி யான நடவடிக்கை எடுக்க வலி யுறுத்தியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திங்களன்று திருப்பூர் குமரன் சிலை முன்பு ஆவேசமிகு ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துகண்ணன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் மணிகண்டன் ஆகியோர் கண் டன உரையாற்றினர். மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் பல்வேறு பொது நல அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்ட திருப்பூர் காவல் துறையினரின் அராஜக செய லுக்கு எதிராக கண்டன முழக்கங் களை எழுப்பினர்.