சேலம், ஆக.13- சேலம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் இருந்த கடைகளை மாநகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத் தியதை கண்டித்து சேலம் மாவட்ட பாதையோர விற்ப னையாளர்கள் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு செவ் வாயன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் மாநகராட்சி நிர் வாகம் பாதையோர வியாபாரிகள் பாது காப்புச் சட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும். சாலையோரங்களில் அடை யாள அட்டை வைத்து கடைகளை நடத்தி வரும் வியாபாரிகள் தொடர்ச்சியாக காவல்துறையினரை கொண்டு துன்பு றுத்தப்படுகின்றனர். மேலும் சேலம் புதிய பேருந்து நிலையம் பகுதிகளில் இருந்த சாலையோர வியாபாரிகளின் கடைகளை அகற்றி உள்ளது. இதனால் அப்பகுதியில் கடை நடத்தி தங்கள் வாழ்வாதாரத்தை பூர்த்தி செய்து வந்த வியாபாரிகள் பாதிப் படைந்துள்ளனர். இதனை கண்டித்து சேலம் மாவட்ட சாலையோர விற்பனை யாளர் சங்கம் சார்பில் கிளை செயலாளர் ஆர்.ஏ.முருகன் தலைமையில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட செயலாளர் டி.உதயகுமார், மாநில குழு உறுப்பினர் ஆர்.வெங்கடபதி, சங்கத் தின் மாவட்ட செயலாளர் தனசேகரன், மாவட்ட தலைவர் எம்.குணசேகரன், மாவட்ட பொருளாளர் பிரகாஷ் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.