குடும்பத்தினர் அச்சம்: டீன் விளக்கம்
தூத்துக்குடி, ஜூன் 26- தூத்துக்குடியில் கொ ரோனாவிற்கு சிகிச்சைய ளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் அதிக நாட்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அவர்களது குடும்பத்தினர் அச்சத்தில் உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் ஆரம்பத்தில் கொரோனாவால் பாதிக்க ப்பட்டவர்கள் எண்ணிக்கை 27 ஆக மட்டுமே இருந்தது. அப்போது ஒருவரை தவிர அனைவரும் குணமடைந்து வீட்டிற்கு சென்றனர். ஆனால் நாட்கள் செல்ல மகாராஷ்டிரா, குஜராத், சென்னை உட்பட வெளி யூர், வெளி மாவட்டங்களி லிருந்து வருவோரால் பாதி ப்பு அதிகரிக்க தொடங்கிறது. தற்போதைய நிலவரப்படி கொரோனாவால் பாதி க்கப்பட்டவர்கள் எண்ணி க்கை 732 ஆக உள்ளது. இதில் கொரோனா தொ ற்றால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு தங்கள் உயி ரையும் பொருட்படுத்தாமல் மருத்துவர்கள், செவி லியர்கள் பணியாற்றி வரு கின்றனர். கொரோனாவுக்கு சிகிச்சையளிக்கும் மருத்து வர்கள், செவிலியர்கள் 7 நாட்கள் தனியார் ஹோட்டல் மற்றும் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்படு வார்கள். ஆனால் தற்போது, அவர்கள் சுமார் 15 நாட்கள் வரை தனிமைப்படுத்தலில் இருப்பதாக அவர்களது குடும்பத்தினர், உறவி னர்கள் அச்சம் தெரிவித்த னர். குறிப்பிட்ட நாட்களை தாண்டி அதிக நாட்கள் தனிமைப்படுத்தி வைத்தி ருப்பது தங்களுக்கு அச்ச த்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் விளக்கம்
இது தொடர்பாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனை முதல்வர் ரேவதி பாலனை கூறுகையில், கொ ரோனா சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள், செவிலி யர்கள் 7 நாட்கள் தனிமைப்ப டுத்தபடுவார்கள். ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் உட்பட அனைவரின் உடல் நலன் கருதியே கூடுதல் நாட்கள் அவர்கள் தனிமைப்படு த்தப்பட்டுள்ளனர். மேலும் அவர்களுக்கு தேவையான உணவு உட்பட அடிப்படை வசதிகளை மருத்துவமனை நிர்வாகம் சார்பில் செய்யப் பட்டுள்ளது. மருத்துவ குழு வினரின் ஆலோசனைப்ப டியே இந்த முடிவு எடுக்கப்பட் டுள்ளது. இது குறித்து அவர்களது குடும்பத்தினர், உறவினர்களிடம் வியா ழனன்று விளக்கம் அளிக்கப் பட்டுள்ளது என்றார்.