கோவை, டிச. 9– கோவையில் 17 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த முக்கிய குற்றவாளியை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல் துறையினருக்கு மகளிர் நீதிமன்ற நீதிபதி அனுமதியளித்தார். கோவையில் 17 வயது சிறுமி , கடந்த 26ஆம் தேதியன்று தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாட நண்பருடன் அதே பகுதியில் உள்ள பூங்கா விற்கு சென்றுள்ளார். அப்போது, அங்கு சுமார் 6 பேர் கொண்ட கும்பல் சிறுமியின் நண்பரை தாக்கியுள்ளனர். பிறகு அந்த சிறுமியை கூட்டு பாலியல் வன்கொ டுமை செய்து வீடியோ பதிவும் செய்துள்ள தாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பான புகாரில் ராகுல் (21), பிரகாஷ் (22), கார்த்திகேயன்(28) மற்றும் நாராயண மூர்த்தி(30) ஆகியோரை போலீஸார் கைது செய்து போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில், முக்கிய குற்றவா ளியான மணிகண்டன் கடந்த டிச 3 ஆம் தேதி கோவை மகளிர் நீதிமன்றத்தில் சரண டைந்தார். இந்த நிலையில், நீதிமன்றத்தில் சரணடைந்த முக்கிய குற்றவாளியான மணி கண்டனை 3 நாட்கள் காவலில் எடுத்து விசா ரிக்க காவல் துறையினருக்கு மகளிர் நீதிமன்ற நீதிபதி ராதிகா அனுமதியளித்துள் ளார். அதேநேரம், இந்த சம்பவம் கூட்டு பாலியல் வன்கொடுமை இல்லை என காவல்துறை தரப்பில் மறுப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.